பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 111 மல்லவா? இவ்வளவு நற்பண்புடைய மக்கள் வாழுகின்ற நாட்டில் அரசன் எத்தகையவனாக இருப்பான் என்று சொல்லவும் வேண்டுமா? . மண்ணில் வாழ்தரு மன்னுயிர்கட்கு எலாம் கண்ணும் ஆவியும் போன்ற மனுநீதிச் சோழன் இவ்வழகிய சோணாட்டை ஆட்சி செய்கின்றான். அறம். பொருள்: இன்பம் பயக்கும் அறநெறி தவறாமல் மறங்கடிந்து. அரசர் களெல்லாம் போற்ற ஒப்பற்ற ஆட்சி செய்யும் மனு வேந்தனுக்கு ஓர்ஆண் குழந்தை பிறந்து வளர்கின்றான். இவன் தந்தை என்ன தவம் செய்தானோ இப் பிள்ளையைப் பெற எ ற திருக்குறளுக்கு ஏற்ப அரசிளங்குமரன் கலைகள் பலவற்றை யும் கற்றுத் தெளிகின்றான். ஒருநாள் மாலைப்பொழுது, யாவர் மனத்தையும் இன்பம் ஈர்க்கின்றது. வெளியே சிற்றுலாச் செல்லத் துண்டுகிறது. அரசகுமாரனும் உலவப் புறப்படுகிறான். முரசம் முழங்கு கிறது: சங்கொலி ஒரு பால் துளும்புகிறது; வீரர்கள் சூழ்ந்து வருகின்றனர்; ஆலத்தி எடுக்கும் பெண்கள் ஒருபுறம்: மங்கலம் கூறி வாழ்த்துகிறவர் ஒருபுறம். இவர் அனைவரின் நடுவே பொன்னால் ஆகிய தேரின்மேல் அரசகுமாரன் அமர்ந்து அழகாகக் காட்சி அளிக்கின்றான். அம்மா என்ற அலறல் ஒலி எழுகின்றது. யாவரும் மருள்கின்றனர். இங்குமங்கும் பார்க்கின்றனர். எங்கிருந்து எழுந்தது இவ்வொலி: நெஞ்சைக் கசக்கிப் பிழிவது போன்ற குழறல்! ஆ, இதென்ன? பசுங்கன்று தேர்க்காலின் அடியில் கிடக்கின்றதே! ஐயோ! ஒரே இரத்த வெள்ளம்! அரசிளங் குமரனும் இக் காட்சியைக் காண்கிறான். பூங்கோயில் அமர்ந்தருளும் பெருமானே! ஈதென்ன கொடுமை! இந்தப் பசுவும். இதன் கன்றும் இன்று என் உணர்வெனும் பெருமையை எல்லாம் உண்டுவிட்டனவே! மண்ணுலகம் தாக்கும்.என் தந்தைக்கு மகனாக நான் ஏன் பிறந்தேன்?! உலகில் இல்லாப் பழியை அவருக்குத் தேடித்தரவா பிறந்தேன்! அமைச்சர்களே! எந்தையார் இதனை அறியா