பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தேசிய இலக்கியம் முன்னம் என்ன கழுவாய் தேடவேண்டுமோ, அதனை உடனே செய்திடுக' என்று வேண்டுகிறான். சோழனின் பழிச் சப்தமோ, அவன் பாவத்தின் ஒலியோ, அரசகுமாரன் உயிரைக் கொள்ளவரும் எமனுடைய வாகனத்தின் கழுத்து மணி ஓசையோ என்று சொல்லும்படி யாக நீண்ட நாளாக ஒலிக்காத அரண்மனை ஆராய்ச்சிமணி ஒலிக்கிறது. என்றும் கேளாத இந்த மணி ஓசையைக் கேட்ட வேந்தன் விரைந்து வாயிலுக்கு வருகிறான். ஈதென்ன புதுமை! மனிதர் யாரும் இங்கில்லையே? ஒரு பசுவன்றோ நிற்கிறது. ஏன் இதன் கண்களிலிருந்து நீர் ஆறாகப் பெருகுகிறது கொம்பால் இது மணியை அடிப்பானேன்? அரசனுக்கு வியப்பும் ஆராய்ச்சியும் ஒருங்கே தோன்று கின்றன. அருகே அமைச்சர்கள் நிற்கின்றனர். அமைச்சர் கள் செம்மையாக இருந்தால் இத்தகைய அநீதி ந்டைபெறுமா என்று கேட்பான்போல அவர்களை இகழ்ந்து நோக்குகிறான். இந்நிலையில் முதலமைச்சன் மிகவும் பணிவுடன் அரசனின் திருவடிகளில் விழுந்து வணங்கிக் கூறுகிறான்: ' வளவ! கின் புதல்வன் ஆங்கோர் மணிகெடுக் தேர்மேல் ஏறி அளவில் தேர்த் தானை சூழ அரசுலாக் தெருவில் போங்கால் இணைய ஆன் கன்று தேர்க்கால். இடைப்புகுந்து இறந்ததாகத் தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்தது இத் தன்மை என்றான்." (பெ. பு-திருநகரம்; 31) (அரசகுமாரன் தேர்மேல் ஏறி அரச வீதியில் செல்லும் போது தானாகவே வந்து தேர்க்காலில் அடிப்பட்டு இறந்தது பசுங்கன்று. அக் கன்றின் தாய் இங்கு வந்து மணி அடிக் கின்றது) - எனறான,