பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தேசீய இலக்கியம் பொருளாழம் உடையதாய் அமைக்கப் பெற்றிருக்கிறது. தேர் போகும்பொழுது அதில் உள்ள மணிகள் ஒலிக்கும். ஆதலால், பசுங்கன்றின் சத்தத்தை அரசகுமாரன் கேட்டிருக்க முடியாது என்பது கருத்து. நெடுந்தேர் என்றதால் அவ்வளவு உயரத்தில் இருந்து பசுங்கன்றைப் பார்த்திருக்கவும் முடியாது என்ற குறிப்பையும் பெற வைக்கிறான். மேலும் தேர்ப்படை களும் காலாட்படைகளும் தேரை நான்குபுறமும் சுற்றிச் சூழ்ந்து வருவதால் எக்காரணத்தைக் கொண்டும் இக் கன்றைக் குமரன் பார்த்திருக்க வழியில்லை என்பதும் அமைச்சனின் வாதம். இத்தனை பேர்களும் சூழ்ந்து வருகையில், இவர்களைத் தாண்டிவந்து தேர்க்காலில் பசுங் கன்று அகப்பட்டது என்றால் அதனைத் தடுக்காமல் இச் செயல் நிகழவிட்டது, சூழ்ந்துவந்த வீரர்களின் குற்றமே அன்றி, அரசகுமாரன் குற்றமன்று என்பதையும் அமைச்சன் குறிப்பாக அறிவிக்கிறான். இன்றுகூட எத்தனையோ விபத்துகள் நடைபெறு கின்றன. ஆனால், குற்றவாளி யார் என்று முடிவு செய்கையில் குற்றம் நடந்த இடத்தைத்தான் கணக்கு எடுக்கிறார்கள். இடப்புறம் வண்டிகள் செல்லவேண்டும் என்ற சட்டத்திற்குட்பட்டு வண்டிகள் செல்கையில், அதனை மீறி வலப்புறமாகச் சென்று. அதனால் விபத்து ஏற்பட் டிருப்பின் வலப்புறம் சென்றவனே அதிகக் குற்றம் இழைத்த வனாகிறான். உள்ளே போக மட்டும்' என்று அடையாள மிட்டுள்ள தெருவின் வழியாக ஒருவன் வெளியேவர முயன்று அதனால் விபத்து ஏற்பட்டிருப்பின், அவன் இரண்டு குற்றங் கள் இழைத்தவனாகிறான். காரணம் உள்ளே செல்லும் வண்டிக்காரனுக்கு மட்டுமே இட உரிமை (Right of Passage) இந்த இடத்தில் உண்டு. - இவ்வுண்மையை மனத்தில் கொண்ட அமைச்சன் அரசு உலாம் தெருவில் போங்கால்’ என்று கூறுகிறான். தேரும் படைகளும் செல்லக்கூடாத வழியாக இருந்து அதில்