பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 115 குமரன் சென்றிருந்தால் ஒருவேளை குற்றமாகலாம். ஆனால், அவன் சென்றது அரசன் உலாப்போவதற்கு உரிய வழி அல்லது தெருவாகும். இன்னும் கூறப்போனால் பசுங் கன்றுக்கு அங்கேவர உரிமையே இல்லை எனக்கூடக் கூறலாம். எனவே, இந்தத் தெருவில் பசுங்கன்று வந்து தேர்ச்சக்கரத்தில் வீழ்ந்தது என்றால், அது குமரன் குற்றம் ஆகாது என்பது அடுத்த வாதம். "இளைய ஆன் கன்று என்று கூறியதால் அது துள்ளித் திரியும் இயல்புடையது என்பதும், விபத்து நேரும் என்பதை அறியாத பருவம் உடையது என்பதையும் குறித்துவிட்டான். தேர்க்கால் இடைப்புகுந்து என்ற சொல்லால் வேண்டு மென்றே தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்துடன் இக் கன்று வந்து வீழ்ந்ததுபோலும் என்ற கருத்தையும் குறிப்பிடு கிறான். புகுந்து’ என்ற சொல்லில் எவ்வளவு பொருளாழம் வைக்கப்பட்டிருக்கிறது. விலக்கி இருந்தாலும் புகுந்து கொள்ளும் முடிவுடன் இருப்பவர்களை எவ்வாறு விலக்க முடியும்? எனவே. இது ஒருவர் குற்றமும் அன்று என்று கூறுபவன்போல் கூறுகிறான் அமைச்சன். இத்துணைப் பொருளையும் வெளிப்படையாக அமைச்சன் கூறியதாகக் கவி கூறவில்லை. ஆனால், பாட்டை அதிலுள்ள சொற்களை அமைக்கும் முறையில் இவ்வளவு பொருளையும் புகுத்திவிட்டார். இதுதான் சிறந்த தலையாய கவிதை எனப்படும். நடைபெற்ற நிகழ்ச்சியின் கொடும்ையைக் குறைத்து மன்னனிடம் பக்குவமாக அமைச்சன் ஒருவன் எடுத்துரைக் கிறான். அவ்வுரை கேட்ட வேந்தன், பசு அடையும் துன்பம் அனைத்தையும் தான் பெறத் தொடங்கிவிட்டான். தன்னை மறந்த நிலையில் புலம்பத் தொடங்கிவிடுகிறான். "உயிர்களைக் காப்பதற்கென்றே கடமை பூண்ட என் செங்கோலின் திறம் இருந்தவாறு என்னே என்று வருந்து கிறான். அரசனுடைய வருத்தம் எல்லை! மீறி விடுகிறது.