பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

இதனையடுத்து மற்றொரு குறிக்கோளும் சேக்கிழாருக்கு இருந்திருத்தல் வேண்டும். தமிழ் மக்கள் தம்முடைய மரபை, பண்பாட்டை இழக்கத் தொடங்கியவுடன் தேசிய மனப் பான்மையையும் இழக்கத் தொடங்கிவிட்டார்கள். இந் நிலை, இவ்வினத்தின் அழிவுக்கே வித்திட்டுவிடுமென்ற உண்மையை உணர்ந்த ஞானசம்பத்தர் தவறாமல் தம்மை 'தமிழ் ஞானசம்பந்தன், முத்தமிழ் விரகன்’ என்றெல்லாம் கூறிக்கொண்ட அடிப்படையைச் சேக்கிழாரும் தன்குணர்ந்து இருக்கின்றார். ஆகவேதான். தமிழ் மக்களை ஒன்று திரட்டும் தேசிய இலக்கியமாகவும் இது பயன்ப2 வேண்டுமென்ற கருத்தில் பெரிய புராணத்தைப் பாடிச் செல்கின்றார். பிற வழக்குகளையெல்லாம் தமிழ் வழக்கு வென்றது? என்று ஞானசம்பத்தர் புராணத்தில் சேக்கிழார் பாடிய கருத்து இதுவேயாம். தமிழ்த் தேசியம் குறுகிய மனப்பான்மையுடையது அன்று; வரம்புகளையெல்லாம் கடந்து நிற்பது; ஜாதி, சமயம் முதலிய போலிக் கொள்கை களைக் கடந்து நிற்பது என்ற கருத்தையெல்லாம் சந்தர்ப்பம் வரும்பொழுது பாடிச் செல்கின்றார் இக் காப்பிய ஆசிரியர். பிறப்பில் அத்தணராகிய ஞானசம்பந்தரை ஒருமுறைகூட "ஐயர்" என்று அழைக்காத, பாடாத, சேக்கிழார் மற்றொரு புதுமையையும் செய்கின்றார். பிறப்பால் ஐயராகிய திருஞானசம்பந்தர், பிறப்பால் ஹரிஜனராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணரை இரண்டு முறை "ஐயரே" என்று அழைக்குமாறு செய்கிறார். இது மட்டுமல்லாமல் தில்லைவாழ் அந்தணர்களாகிய பெருமக்கள் திருநாளைப்போவாரை (நந்தனாரை) "ஐயரே" என்று அழைக்குமாறு சேக்கிழார் காப்பியம் பாடுகின்றார். தமிழ்நாட்டில் பிறந்தவர்கள், இறைவன்பால் அன்பு பூண்டவர்கள் யாராக இருப்பிலும்,