பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 18 தேசீய இலக்கியம் இதுபோல் முன்னர் யாரேனும் செய்தது உண்டா? அரசன் காக்கவேண்டியவற்றுள் தலையாயது மரபு அன்றோ? இத் தகைய சந்தர்ப்பங்களில் மறை நூல்கள் மொழிந்தபடி செய்தல் அன்றோ மரபு?’ என்ற முறையில் வாதிட்டனர். மரபைக் காத்தல் என்ற இப்புதுமுறை வாதத்தைக் கேட்ட மன்னனுக்குக் கோபம் பொங்கிவருகிறது. நெருப்பில் பட்ட செந்தாமரைபோல அரசன் முகம் கோபத்தால் கரிந்து விட்டது. 'அறமுறை ஆராயாத அமைச்சர்களே! மரபைப் பற்றிப் பேச வந்துவிட்டீர்களே நீங்கள்! எப்பொழுது மரபு ஏற்பட முடியும்? இதுபோல் முன்னர் இவ்வுலகில் ஒரு செயல் நிகழ்ந்தது உண்டா? ஒரு பசு பெருந்துயரம் தாங்காமல் கதறியழுது அரண்மனை வந்து ஆராய்ச்சி மணியை அடித்தது உண்டா? முன்னர் நடந்தறியாத இச்செயலை ஆராயப் புகுங்கால் மரபைப்பற்றிப் பேசுவது எத்துனைத் தவறானது?’ என்று அவர்களை மன்னன் இடித்துக் கூறி விட்டு, அடுத்து, தமிழன் கண்ட அறத்தை விளக்குகிறான். அரசன் கூறிய அறத்தை விளங்கிக்கொள்ள அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை என்ற திருக்குறளை முதலில் கருத்தில் இருத்தவேண்டும். பிற உயிர்கட்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததுபோலக் கருதி, அதனைப் போக்க முற்படா விடின் ஒருவன் பெற்ற அறிவினால் எப்பயனும் இல்லை என்பதே இக்குறள் குறித்த பொருள். இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் இது பெரும்பான்மையும் அஃறிணைக் கண் நுண்ணிய உடம்புடையவற்றைப் பற்றி வருதலின் 'பிறிதின் நோய் என்றார் என்று கூறிச் சென்றதும் அறிதற் பாலது. எனவே, அறிவுடைய ஒருவன் கடமையாவது அஃறிணை உயிராயினும் அது துன்புற்றவழி அத்துன்பம் துடைக்க முற்படல் வேண்டும். முற்படல் வேண்டும் என்று கூறியதால் ஏதோ என்னால் ஆனமட்டும் முயன்று பர்ர்த்