பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 - - தேசீய இலக்கியம் அப்பாற்றபட்ட ஒன்று. எனவே, எஞ்சியிருப்பது ஒரே வழி தான். அதனை அரசன் பேசுகிறான். இப்பசுவின் பெரிய துன்பத்தை யானும் தாங்குவதே முறை என்று அவன் குறிப் பிடுகையில் அஞ்சத்தகுந்த ஒரு முடிவை மேற்கொண்டு விட்டான் என அமைச்சர்கள் அறிந்தனர். g தற்காலத்தில் பிறர் துயரங் கண்டு நமது ஆழ்ந்த அநுதாபத்தைக் கடித மூலமாகவும், நரம்பு இல்லாத நாக்கின் மூலமாகவும் மிக எளிதாகத் தெரிவித்துக்கொள்ளப் பழகி விட்ட நமக்கு. அரசன் முடிபு என்னவென்று அறிந்து கொள்ளுதல் இயலாத காரியந்தான். தனது மகன் உயிருடன் இருக்கையில் அவனை இழந்த வருத்தத்தை அரசன் மேற் கொள்வதாகக் கூறினால், அது கலப்பற்ற பொய் என்று கூறாமலே விளங்குமன்றோ! எனவே, மன்னர் மன்னனான மனுநீதிச் சோழன் உண்மையிலேயே பசுவின் துயரைத் தானும் தாங்க முடிவு செய்துவிட்டான். இவ்வாறு செய்வதால் பசுவுக்கு என்ன பயன் என்ற வினாவை எழுப்பிப் பயன் இல்லை. பசுவுக்குப் பயன்படும் முறையில் ஒன்றுஞ்செய்ய இயலாத அரசன், அக்கொடுமையைப் பார்த்துக்கொண்டு வாளாவிருத்தல் தகாது என உணர்ந்து, அறிவின் பயன் தானும் அந்நிலை அடைதலே எனத் துணிந்துவிட்டான். இனிப் பசுவைப் பற்றிய கவலை இல்லை. ஏனெனில், அதன் துயரைக் கண்டு வைத்தும் அதனைப் போக்காமல் வாளா இருந்துவிட்ட பாவம் அவனைச் சாராது அன்றோ? இம்முடிவுக்கு வரத்தான் அரசனுக்கு ஆராய்ச்சி தேவைப்பட்டதே தவிர, முடிவு செய்தபின் அதைக் கொண்டு செலுத்தலில் அதிகக் காலந் தாழ்த்தவில்லை. "ஒருமைந்தன் தன்குலத்துக்கு உள்ளான்னன் பதும் உணரான் தருமர்தன் வழிச்செல்கை கடன்என்று தன்மைக்தன்