பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 135 கூறப்படுகிறாய்” என்ற கருத்தைக் கூறுவதில் நாம் அறிய வேண்டுவதும் ஒன்றுளது. - அவ்வூரார் எத்தகைய தவஞ் செய்தனர் என்ற கேள்வி அடுத்துத் தோன்றும் அல்லவா? தவம் என்றவுடன் 'காடுகள் சென்று கன சடை வைத்து வாழும் வாழ்வைப் பலர் நினைத்தல் கூடும். தவம் அது அன்று என்பதைக் கூறவந்த வள்ளுவப் பெருந்தகை, தவஞ் செய்வார் தம் கருமம் செய்வார்' (குறள், 266) என்று தவத்திற்கு இலக் கணம் விதித்துவிட்டார். எனவே சேக்கிழார், நம்பியாரூரர் தம்மிடம் பிறக்கத் திருநாவலூர்வாசிகள் வேண்டிச் செய்த தவத்தை நான்காம் வரியில் குறிப்பிடுகிறார். வாய்மை குன்றாத் திருமறையவர்கள் என்ற சொல்லால் அவர்கள் செய்த தவம் குறிக்கப்பெறுகிறது. வாய்மை குன்றாத வாழ்க்கை வாழ்ந்தால் அதைவிடச் சிறந்த தவம் வேறு என்ன செய்ய வேண்டும்? "பொய்யாமை பொய்வாமை ஆற்றின் ஆறம்பிற செய்யாமை செய்யாமை கன்று" - (குறள், 297) என்பது சட்டநூல் விதித்தது அன்றோ? எனவே, வாய்மை குன்றாத வாழ்க்கை உடைமையின் அவர்கள் எல்லாவகைத் திருவும் உடையவர்கள் என்பதும் பெறப்படுகிறது. ஆகலின் வாய்மை குன்றாத திருமறையவர்கள் வாழும் ஊர் நல்ல தவஞ் செய்தலின் நம்பியாரூரைப் பெறத் தகுதி யுடையதாயிற்று. இத்தவத்தைப்பற்றிக் கூறவந்த ஆசிரியர் 'மருவிய தவம்’ என்று கூறியதிலும் ஒரு தனிச் சிறப்புண்டு. சிற்சில பொருள்கள் பலரிடத்திலும் காணப் படினும் ஒரு சிலரிடத்தில் அழகை அதிகப்படுத்தலையும் ஒரு சிலரிடத்தில்