பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 127 இப்பாடலின் முதல் அடி ஊன்றிக் கவனிக்க வேண்டிய ஒன்று. உமையொரு பாகனாகிய சிவபெருமானுக்குப் பரம் பரையாக அடிமை செய்யும் வேதியர் குடியில் பிறந்தார் சடையனார் என்பதே இதன் பொருள். பரம்பரையாக ஆண்டவனுக்கு அடிமை செய்யும் குடி என்று சேக்கிழார் குறிப்பிடும்பொழுது சிறந்த ஒரு கருத்தை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். எந்தச் செயலையுமே புதிதாகச் செய்வ தற்கும் நீண்ட நாளாகச் செய்வதற்கும் வேறுபாடு உண்டு. அதிலும், தன் தந்தையின் தொழிலில், மகனுக்கு இயற்கை யாகவே ஒருவகை ஆற்றல் நிறைந்திருக்கும் என்பது இற்றை நாள் மனத் தத்துவர்கள் கண்ட உண்மையாகும். ஆனால், இக்கருத்தை நம் பழந்தமிழ் நூல்கள் பறைசாற்றுகின்றன. "மகன் தந்தை அறிவு (நாலடி: 378) என்று நாலடியாரும், "குலவிச்சை கல்லாமல் பாகம்படும் (பழமொழி: 5) என்று பழமொழி நூலும் கூறிச் செல்கின்றன. எனவே, பரம்பரையில் ஒரு பெருமை உளதென்பதை அனைத்தையும் நம்ப மறுக்கிற வர்கள் கூட, நம்பித்தான் ஆகவேண்டும். ஏனைய தொழில்கட்குப் பரம்பரை உதவி செய்யலாம். ஆனால், கடவுள் பக்திக்குக்கூட இது தேவையா என்ற வினா நியாயமானதே. இந்நாட்டில் ஆண்டவனிடத்து அன்பு செலுத்துவதைக்கூட ஒரு கலையாகவே வளர்த்துவிட்டார்கள். ஒருவன் கொண்ட பக்தியின் ஆழம், அகலம், உழைப்பு முதலியவை இப்பரம்பரையால் அறுதியிடப்படுகின்றன. எந்த நிலையிலும் இறைவனை அன்றி வேறு பொருளை நாடாத மனநிலை பரம்பரையால் பெறுகிற ஒரு மனநிலைதான். இதனால்தான் வழிவழி என்று சேக்கிழார் கூறுகிறார் அடுத்துள்ள சொல் 'அடிமை செய்யும்’ என்பது. என்ன? தமிழர்களுக்கே இந்த அடிமைப் புத்தி போவதில்லை போல் இருக்கிறதே? என்று சிலர் சீறும் குரல் காதில் விழுகிறது. ஆண்டவனுக்கும், கொள்கை, நம்பிக்கை