பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தேசிய இலக்கியம் திருமணம் நடைபெறத் தொடங்கும் அளவில் இறைவன் கிழவேதியர் வடிவுகொண்டு சென்று அம் மணத்தைத் தடை செய்துவிட்டான். நம்பியாரூரரின் பாட்டன் எழுதித் தந்ததாக ஓர் ஒலையைக் காட்டினான். அவ்வோலையில் நம்பியாரூரரும் அவர் மரபோரும் இக் கிழவனுக்கு அடிமை என்று வரையப்பட்டிருந்தது. "ஆசில் அந்தணர்கள் வேறு ஒர் அந்தணர்க்கு அடிமை யாதல் பேச இன்று உன்னைக் கேட்டோம், பித்தனோ மறை யோன்? (40) என்று நம்பியாரூரர் இவரை எள்ளி நகை யாடினார். என்றாலும் கிழவன் விடுவதாக இல்லை. இறுதி யில், நம்பி, கிழவனைப் பார்த்து அழிவழக்குப் பேசும் கிழவரே உம்முடைய ஊர்தான் என்ன ஐயா, என வினவ, அவர் அண்மையில் உள்ள திருவெண்ணெய் நல்லூரே தம்முடைய ஊராகும் என்றார். இருசாரரும் அவ்வூரில் சென்று வழக்கு மன்றத்தில் வழக்காடச் சென்றனர். நம்பியாரூரர் தமக்கு அடிமை என்று வழக்காடிய கிழவரைப் பார்த்து நீதிபதிகள் கேட்கும் கேள்விதான் மிக அழகானது. "கிழவரே, அந்தணர் அடிமை ஆதல் இந்த மாநிலத்தில் இல்லை. ஆனால், நீர் வழக்காடி வந்துள்ளீர். இதுவரை எங்கும் காணாத வழக்கைக் கொண்டுவந்துள்ள நீர் கூறுவதை உறுதிப்படுத்த மூன்று சான்றுகளில் ஒன்றைக் காட்டுங்கள்,: என்றார். அவர்கள் கேட்ட அம்மூன்று சான்றுகளே இன்றும் நீதிமன்றங்களில் எடுபடுவனவாகும். ஆ ட் சி யி ல் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள் காட்சியில் மூன்றில் ஒன்று காட்டுவாய்' (56) என்கிறார்கள். இங்கு ஆட்சிக்கு முதலிடம் தருதல் மிகவும் கவனித்தற்குரியது. ஆட்சி என்பதைத் தற்கால மேனாட்டுச் சட்ட நிபுணர்கள் 'Custom என்பர். எழுத்துச் சட்டத்தையும் மேலாட் வல்ல சக்தி பெற்றது ஆட்சி என்பது. அதனை அன்றே. தமிழர்கள் போற்றிக் கொண்டனர் என்பதைத் தான் இப்பாடல் ஆட்சியை முதலிற் கூறி உறுதிப்படுத்துகிறது. -