பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.3% - தேசிய இலக்கியம் விட்டு விடுகின்றன. இறைவனுடைய பக்தி அநுபவத்தில் ஈடுபடும் பெரியவர்கள் அவ்வுண்மையை அறிவார்கள். திருவெண்ணெய் நல்லூரில் திருமணம் தடைப்பட்டுப் போன பின்னர் நம்பியாரூரர் இரண்டு திருமணங்கள் புரிந்து கொள்கிறார். திருவாரூரில் தங்கி நிறைந்த செல்வர்போல வாழ்ந்து வருகிறார், என்றாலும் என்ன? இவ்வாழ்க்கை அவரை ஒன்றும் செய்துவிடவில்லை. இதுபற்றிப் பின்னர்க் காண்போம். - திருவெண்ணெய் நல்லூரில் இறைவனைப் பாடி அவன் அருள் பெற்ற நம்பியாரூரர் இறைவன் அமர்ந்துறையும் பதிகள் பலவற்றையும் சென்று வணங்க விரும்பினார். அங்கிருந்து திருநாவலூர், திருத்துறையூர் முதலிய இடங்களை வணங்கிக் கொண்டு சிதம்பரம் செல்ல வேண்டும் என்ற விருப்புடன் வருகின்றார். பெண்ணையாற்றைக் கடக்கும்போது பொழுது சாய்ந்து விடவே இரவு ஒர் இடத்தில் தங்கவேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. ஆற்றின் அக்கரையில் "திருவதிகை வீரட்டானம் பண்ணுருட்டி புகைவண்டி நிலையத்தின் சமீபத்தில் உள்ள ஊர்) எதிர்ப்படுகிறது. ஆனால், நம்பியாரூரர் அவ்வூரினுட் செல்ல அஞ்சுகிறார். திருநாவுக்கரசராகிய பெரியவர் இறைவன் திருவருள் பெற்றதும் இத்தலத்தேயாகும்; அப்பெரியார் பல நாள்கள் தங்கித் தம் கைகளால் உழவாரப்பணி (புல் செதுக்கும் தொழில்) செய்ததும் இவ்வூரில் ஆகுமன்றோ! எனவே, நம்பியாரூரர் இத்தலத்தினுள் தம் கால்களால் நடந்தேக அஞ்சுகிறார். "உடையஅரசு உலகேத்தும் உழவாரப் படையாளி விடையவர்க்குக் கைத்தொண்டு விரும்புபெரும் பதியைமிதித்து அடையும்.அதற்கு அஞ்சுவன் என்று அங்ககளில் புகுதாதே மடைவளர்தண் புறம்பணையில் சித்தவட மடம் புகுந்தார்." (பெ.பு.-தடுத்தாள், 83)