பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தேசீய இலக்கியம் ஊட்டப்பெற்று, மூன்று வயதில் வேதமும் சுட்டிக்காட்ட முடியாத பரம்பொருளைச் சுட்டிக்காட்டிய பெரியார் அன்றோ ஞானசம்பந்தர். அப் பதியில் காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து சென்றதை நினைத்துவிட்டார். உடனே அம்மையார் தலையால் நடந்த இடத்தை யான் காலால் மிதித்து நடப்பதோ என்று கருதி ஊரினுள் செல்லாமல் தூரத்தே இருந்தபடி இறைவனை நினைந்து வணங்குகிறார். "இம்மையிலே புவிஉள்ளோர் யாருங் காண ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை ஆளும் அம்மைதிருத் தலையாலே கடந்து போற்றும் அம்மையப்பர் திருவாலங் காடாம் என்று தம்மைஉடை யவர்மூதூர் மிதிக்க அஞ்சிச் சண்பைவரும் சிகாமணியார் சாரச் சென்று செம்மைகெறி வழுவாத பதியின் மாடோர் செழும்பதியில் அன்றிரவு பள்ளி சேர்ந்தார்." (பெ. பு-ஞான சம்பந்தர்,1008) ஞானசம்பந்தர் தமக்கு முன்னர் வாழ்ந்து அம்மையாருக்கு மரியாதை செய்த காரணத்தால் அவருக்குப் பின் வருபவர்கள் இம் மரியாதையை அவருக்கே செய்கின்றனர். நம்பியாரூரர் சீர்காழிக்குச் செல்கிறார். ஞானசம்பந்தர் பிறந்தருளிய ஊர் என்ற நினைவு தோன்றியவுடன் பிள்ளையார் திரு அவதாரம் செய்த பெரும்புகலி உள்ளும் நான் மிதியேன், (தடுத்தாள்! 112) என்று ஊர் எல்லைப்புறம் வணங்கிச் செல்கிறார். தம்மையன்றிப் பிறரை மதிக்கத் தெரியாத தற்காலம் வாழும் நாம் இப் பெரியார்கள் வாழ்வில் அறியவேண்டிய மிக இன்றியமையாத பாடம் அன்றோ இது? - - நுணங்கிய கேள்வியோன் திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் என்பதால் சீர்காழி யைக் காலால் மிதித்துக் கடக்க விரும்பாமல் நம்பியாரூரராகிய