பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 185 சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவ்வூரைச் சுற்றிக்கொண்டு சென்றார் என்று கண்டோம். இத்தகைய மதிப்பை நாவுக்கரசர் பெருமானிடமும் காட்டி அப் பெரியார் தொண்டு செய்து வாழ்ந்த திருவதிகை என்னும் ஊரிலுள்ளும் நுழைந்து செல்ல விருப்பம் இன்றி ஊரின்புறத்தே உள்ள சித்தவட மடம் என்ற மடாலயத்தில் தங்கிவிட்டார் நம்பியாரூரர். இரவுப் பொழுதைக் கழிக்க நம்பியாரூரர் தங்கிய அந்த மடம் இன்று பாழ்பட்ட நிலையில் காட்சி அளிக்கிறது. அன்று அவரையும் அவருடன் வந்த நூற்றுக்கணக்கான அடியார்களையும் தன்னிடம் தங்கச் செய்த பெரும்ை அம் மடாலயத்திற்கு இருந்தது. அடியார்கள் புடைசூழ நம்பி யாரூரர் உறக்கம் கொண்டார். நடுநிசிப் பொழுதில் அவருடைய திருமுடியின்மேல் இரண்டு கால்கள் உதைப்பதை உணர்ந்தார். தி ரு ம ன க் கோலத்துடன் இருப்பவரும் இறைவனை நேரே கானும் பேறுபெற்றவரும் ஆகிய நம்பியாரூரரை ஒருவர் தம் கால்களால் மிதித்துவிட்டார் என்றால் அதனை என்னென்று கூறுவது? அதிலும் அவருடைய தலையின் மேலேயே ஒருவருடைய கால்கள் பட்டன என்றால் கேட்கவும் வேண்டுமா? வாழ்க்கையில் இத்தகைய நிகழ்ச்சிகள் பல நிகழ்கின்றன. புகைவண்டியிலும், பஸ்ஸிலும் நிறைந்த கூட்டத்துடன் நாமும் செல்கிறோம். சிற்சில சந்தர்ப்பங்களில் உடன் ஏறுபவர்கள் நம் காலை மிதித்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். உடனே புராணங்களிற் படிக்கிற துர்வாசராக நாம் மாறிவிடுகிறோம். அதிலும் மிதித்தவர் குழாயும் தொப்பியும் அணிந்தவராகவும் வயது முதிர்ந்தவராகவும் இருந்துவிட்டால் கேட்கவேண்டியதில்லை. நம் கோபம் உச்சநிலையை அடைந்து அவர் கண் பழுதுபட்டதைச் சுட்டிக்காட்டி, வயதானவர்கள் இவ்வாறு கூட்ட்த்தில் ஏறு வதன் பிழையையும் எடுத்துக்காட்டி ஒரு சொற்பொழிவே செய்து விடுகிறோம் மிதிபட்டவர் இளமையுடையவராய் வாழ்க்கை வசதியுடையவராயும் இருந்து, மிதித்தவர் வயது