பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 197 ஆரூரர் தாமே வேறு இடத்தில் தலையை வைத்து உறங்கச் சென்றார் என்றால் அவருடைய பண்பாட்டை என்னென்று கூறுவது? புதிய இடத்தில் தலையை வைத்து ஆரூரர் உறங்கப் போனாலும் கிழவர் அவரை விடுவதாக இல்லை . அந்தப் புதிய இடத்திலும் தம். கால்களை நீட்டினார். எங்கும் நிறைந்து அணுத்தோறும் உறைகின்ற பரம்பொருளே கிழ வடிவத்தில் இருத்தலின் புதிய இடத்திற்குத் தாமும் செல்லாமலே அக் கிழவர் தம் கால்களை இருந்த இடத்தில் இருந்தே ஆரூரர் தலையின்மேல் வைத்தார். எத்தனையோ பெரியோர்கள் காடுகள் சென்று, கனசடை வைத்து. உணவை ஒடுக்கி, அருந்தவங்கள் முயன்று, எவனுடைய திருவடி தம் தலையில் சூட்டப்பட வேண்டும்’ என்று விரும்புகிறார்களோ அவனுடைய திருவடி இவ்வளவு எளிதாக ஆரூரரின் தலையில் சூட்டப்படுகிறது. மீட்டும் பழைய கிழவரே இவ்வாறு செய்தார் என்பதை நினைத்த ஆரூரர் புதிய இடத்தில் சென்று உறங்கவும். அங்கும் இக் கிழவரின் திருவடிகள் தம் கடமையைச் செய்தன. இவ்வாறு பன்முறையும் நடைபெற, இறுதியில் ஆரூரர் இந் நிகழ்ச்சியின் அடிப்படையை அறிந்துகொள்ளவேண்டி அக் கிழவரை யார் என்று கேட்கிறார். புதிய ஒருவரை நீர் யார் என்று கேட்பது பண்பாடுடைய செயலன்று. எனவே அவ்வாறு கேட்கவேண்டிய காரணத்தை முன்னர்க் கூறிய பின்னரே அவர் யார் என்று கேட்கிறார்.ஆரூரர். அங்கும்.அவன் திருமுடிமேல் மீட்டும்அவர் தாள்ட்ேடச் செங்கயல்பாய் தடம்புடைசூழ் திருகாவல் ஊராளி "இங்குனன்னைப் பலகாலும் மிதித்தனை யார்?' என்னக் கங்கைசடை கரந்தபிரான் அறிந்திலையோ எனக்கரர்தான் - அறிக்திலைே (பெ. டுேத்தான். 87)