பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தேசீய இலக்கியம் சொல் அடக்கத்தைப் பழக்கத்தின் காரணமாகச் சிலர் மேற் கொள்ளலாம். இன்ஷ9ரன்ஸ் ஏஜென்டுகள் எவ்வளவு சொல் அடக்கம் உடையவர்கள் என்பதை நம்மில் பலரும் அநுபவித்துள்ளோம். அதேபோல வாணிகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கட்கும் சொல் அடக்கம், பழக்கத்தில் அமைந்துவிடுகிறது. ஆனால், செயற்கையாகப் பழகிய பழக்கத்தால் வந்த இந்தச் சொல் அடக்கம், வேறு ஒரு பயனைக் கருதித் தோன்றிய இந்த அடக்கம், சந்தர்ப்பம் நேரும்பொழுது அழிந்துவிடும். உள்ளே தோன்றும் கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கப் பழகிக்கொண்ட வித்தையே தவிர இது வேறு இல்லை, ஆனால், ஆரூர ருடைய வார்த்தைகளில் எவ்விதமான உட்கோபமும் தொனிக்கவில்லை. எனவே, நல்ல பண்பாட்டில் தோன்றிய சொற்கள் அவை என்று அறிய முடிகிறது. இத்தகைய சொல் அடக்கத்தைத்தான் வணங்கிய வாய்' என்று குறிப் பிடுகிறார் வள்ளுவர். எத்தகைய பண்பாடு உடையாருக்கு இத்தகைய அடக்கம் கிடைக்கும்? இதோ விடை கூறுகிறது குறள. . . 'துணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது’ (குறள், 419) (நுண்மையான கேள்வி ஞானத்தை உடை யவர் அல்லாதார்கள் பணிந்த மொழியினை உடைய வராக ஆதல் முடியாது.) நுண்மையான கேள்வி ஞானம், சிறந்த கல்வி ஞானம் உடையவர்கட்கே இயலும். எனவே, ஆரூரருடைய் வணங்கிய வாய்க்குக் காரணம் அவருடைய சிறந்த கேள்வி ஞானமும் கல்வி ஞானமுமே என நினையவேண்டியுளது. சிறந்த கல்வியைப் பெற்றபொழுது, தம் சிறுமையை நினைக்க அக் கல்வி ஏதுவாகலின், பிறர்மாட்டு வணக்கம் தானே வரும் என்பது பெறப்படுகிறது.