பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தேசீய இலக்கியம் அதனால் மோக்ஷம் முதலிய வேறு பயன்களை அவர்கள் கருதுவதுமில்லை விரும்புவதுமில்லை. அதற்கு மறுதலையாக அவனைக் கும்பிடுவதையே பயனாகக் கண்டவர்கள். கும்பிடு: தல் வழி, வீடு பேறு பயன் என்று தனித்தனியாகக் கருதா மல் வழியும் பயனும் கும்பிடுதலே எனக் கண்டவர்கள். ஆரூரர் இவ்வாறுதான் கருதினார் என்பதை இதோ சேக்கிழார் குறிப்பிடுகிறார். . தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்தன் திருகடம் கும்பிடப் பெற்று * + மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று - கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேல் குவித்துப் பண்ணினால் டிே அறிவரும் பதிகம் பாடினார் பரவினார் பணிந்தார் - (பெ.பு-தடுத்தாள், 107) (தெண்ணிலா-தெளிந்த ஒளியையுடைய நிலா; வேணியாய்-சடையை உடையவனே வாலிதாம். தூய்மை.) தில்லைக் கூத்தன் நம்பியாரூரைத் திருவாரூர் செல்லு மாறு பணித்தான்; அப் பணி தலைமேற்கொண்டு ஆரூரர் திருவாரூர் சென்றார். புற்றைத் தமக்கு இடமாகக்கொண்டு பூங்கோயில் அமர்ந்தருளும் தியாகராசப் பெருமானைக் கண்டார். தம்மை மறந்த நிலையில் அவனை வழிபட்டார். இறைவன் அருளால் 'தம்பிரான் தோழர் என்ற பட்டப் பெயரைப் பெற்றார். இத் தொடரின் பொருள் 'இறைவ துடைய நண்பர் என்பதாகும். - பெருமை வாய்ந்த இத் திருவாரூரிலே வாழும் கணிகை யர் குடும்பங்களில் ஒரு குடும்பத்தில் பரவையார். என்ற பெண் ஒருவர் தோன்றி வாழ்கின்றார். இறைவனருளில்