பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன். 145 திளைக்கும் அப் பெண்கொடியார் வளர்ந்து தக்க பருவம் எய்தி அழகெலாம் திரண்ட வடிவாய் இருக்கின்றார். மான் இளம் பிணையோ தெய்வ வளர்இள முகையே வாசத் தேன்.இளம் பதமோ வேலைத் திரை இளம் பவள வல்லிக் கான் இளம் கொடியோ திங்கள் கதிர் இனம் கொழுக்தோ காமன் தான் இளம் பருவம் கற்கும் தனி இளம் தனுவோ என்ன (பெ.பு.-தடுத்தாள், 184) (இளமான் குட்டியோ, தெய்வத்தன்மை பெற்ற மலரோ, கடலில் உள்ள பவளக் கொடியோ. இளம் பிறையோ, இளங் கரும்போ) இங்ங்னம் வருணிக்கக்கூடிய முறையில் வளர்ந்துள்ள் இப் பெருமாட்டிக்கு இறைவன்மாட்டு உள்ள அன்பும் எல்லை இல்லாமல் வளர்ந்துள்ளது. தினந்தோறும் தியாக ராசப் பெருமானைச் சென்று வழிபட்டுவரும் இயல்புடையவர் பரவையார். ஒரு நாள் வழக்கப்படி திருக்கோயில் சென்று வழிபாடு ஆற்றச் செல்கையில், எதிரே அடியார்கள் புடைசூழ நம்பியாரூரர் வருகின்றார். அழகே வடிவாய்த் தம் எதிரே வருகின்ற பரவையாரை, ஆரூரர் கண்டார். அவராகக் கண் டார் என்று கூறுவதைக்காட்டிலும் விதிகடைக்கூட்டுவிக்கக் கண்டார் என்று கூறுவதே முற்றிலும் பொருத்தமுடையது. சேக்கிழாரும் நற்பெரும் பான்மைகூட்ட” (ஷெ 129) என்றே இந் நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறார். இவ்வாறு அவர் கூறவும் ஒரு காரணம உண்டு. காமன், உலகை வெல்லக் கையில் எடுத்த வில்போலும் அமைந்துள்ள இப் பெண் அரசியை எத்தனையோ ஆடவர் கண்டிருத்தல் கூடுமென்றோ அதிலு: தேசி.-10 . . . -