பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் . - 147 உண்டு. ஆனால், அக் காதலியைச் சிவன் அருள் என்று நினைப்பவர் உண்டோ? நம்பியாரூரர் போன்ற ஒரு சிலரைத் தவிரப் பிறர் அவ்வாறு எண்ண இயலாது. காதலிக்கப்பட்ட பெண்ணைச் சிவன் அருள் என்று நினைக்கும் ஆடவனுக்கு ஏற்ற காதலியோ அவள் என்று காண்பது இன்றியமையாத தன்றோ? இதோ பரவையார் ஆரூரரைப் பிரிந்து சென்று வருந்துகிறார் : "முன்னேவர்து எதிர்தோன்றும் முருகனோ பெருகுஒளியால் தன்னேரில் மாரனோ! - தார்மார்பின் விஞ்யைனோ! மின்னேர்செம் சடைஅண்ணல் மெய்அருள்பெற்றுடையவனோ! என்னே! என் மனம்திரித்த இவன்யாரோ எனகினைந்தார்" (பெ.பு.-தடுத்தாள், 144) காதலியைச் சிவன் அருள் என்று நினைக்கிறார் காதலர் தன் காதலனைச் சிவபெருமான் அருளை உண்மையில் முழு வதும் பெற்றவன் என்று நினைக்கிறாள் அக் காதலி. எனவே, இவ் விருவர் இடையேயும் தக்க பொருத்தம் அமைந்து விட்டதை அறிகிறோம். "பாச மாம்வினைப் பற்றுஅறுப் பான்மிகும் ஆசை மேலும்ஒர் ஆசை அளிப்பதுஓர் தேசின் மன்னிஎன் சிக்தை மயக்கிய ஈசனார்.அருள் எக்கெறிச் சென்றதே" - (பெ.பு.-தடுத்தாள், 152) பெரியோர்கள் இல்லறத்தைப் பந்தம் கட்டு என்று கூறுவர். இவ்வாறு உள்ள கட்டு நீங்கினால் அன்றி இறைவன் அடி கூடல் இயலாதென்பர். ஆனால், இத் தமிழ்நாட்டில்