பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 لمسسه همي وييپوه 'குற்றாலக் குறவஞ்சித்" தலைவியாகிய வசந்த வல்லி என்பவள். அவள் அனுபவத்தைக் கேளுங்கள்: "விண்ணிலே கெருப்பை வைத்தாய் தண்ணிலாக் கொடும்பாவி வெண்ணிலாவே தண்அமு துடன்பிறந்தாய் வ்ெண்ணிலாவே, தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே" (அமிழ்தம் தோன்றிய பாற்கடலில் முதலில் சந்திரன் தோன்றியதால் இவ்வாறு கூறினாள்.) "கைக்கரும்பு என்: கணைஎன்ன நீ என்ன மன்மதா இந்தச் செக்கரும் பாவி கிலவுமே போதாதோ மன்மதா" (குற்றாலக் குறவஞ்சி; 23) (செக்கர்-மால்ைக்காலத்தில் சிவந்து தோன்றும் அந்தி வானம்.) - இப் பாடல்களில் காணும் தலைவியரைப் போலவே நம்பி யாரூரரிடம் காதல் கொண்ட பரவையார் வருந்துகிறார். தோழிகள் செய்யும் உபசரணை அனைத்தும் அவர் காதல் தீயை வளர்க்கப் பயன்படுகின்றனவே தவிர, வேறு பயன் விளைவிக்கவில்லை. கோழிகளை நோக்கி அவர் இதோ பேசுகிறார்: கந்தம் கமழ்மென் குழலீர்! இது என் கல்ைவாண் மதியம் கனல்வான் ன்னை இச் சந்திரன் தழலைப் பனிநீர் அளவித் தடவும் கொடியிர்! தவிரீர் தவிரீர் வந்திங்குலவி நிலவும் விரையார் மலையா னிலமும் எரியாய் வருமால்குளிர்ந்த இயல்புடைய மதியம் நெருப்பை வீசுவதாகவும் அத் தோழியர் சந்தனம் என்ற பெயரில் நெருப்பைப் பன்னிருடன் கலந்து பூசுவதாலும், அச் செயலைச் செய்யாது இருக்கும்படியாகவும் அவர் வேண்டுகிறார். இவ்வாறெல்லாம் பரவையார் வருந்துவது, காதல் கொண்டு வருந்தும் ஏனைய பெண்களைப் போலவே அமைந்துள்ளது. ஆ ன் ல், மற்றைப் பெண்கள் நிலவையும். தென்றலையும். சந்தனத் தையும் பழிப்பதுடன் நி ன்று வி டு வர். ஆனால்,