பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 159 கமே தில்லைவாழ் என்பதாகும். தில்லையை முதல் வரியில் கூறினால் அடுத்தாற்போல் புலிக்கால் முனிவர் நினைவு வரத்தானே செய்யும். அவ்வாறு இருந்தும் ஆரூரர். இவ் விருவரையும் விட்டுவிட்டார் என்றால் யாது காரணமாக இருக்கலாம்? முதலிற் கூறியபடி ஒரே ஒரு காரணம்தான் கூற முடியும். அது யாது? இவ்விருவரும் தமிழ்நாட்டு எல்லைக்குள் பிறந்தவர்கள் அல்லர். தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தில் வியாக்கிர பாதரும், திருக்கடவூரில் மார்க் கண்டரும் வீடுபேற்றை அடைந்தாலும், அவர்கள் பிறந்தது தமிழ்நாட்டில் அன்று ஆதலால்தான் ஆரூரர் அவர்களைப் பாடாமல் விட்டுவிட்டார். தமிழ்நாட்டில் பிறந்த அடியார்களைமட்டும் திருத் தொண்டத் தொகையில் பாடினார் என்ற காரணத்தால், அவர்கள் மட்டுமே அடியார்கள் என்ற குறுகிய நோக்கம் கொண்டவரோ ஆரூரர் என்று நினைத்துவிடவேண்டா. திருத்தொண்டத் தொகை வரலாற்று உணர்ச்சியுடன் பாடும் பொழுது தமிழர்களை மட்டும் குறிப்பிட்ட நம்பியாரூரர், அத் தொகையின் ஒரு பாடலில் தம் பரந்த நோக்கத்தை வெளி யிடுகிறார். ஏனைய சமயவாதிகளைப்போல் தங்கள் சமயமே உயர்ந்தது என்றும் அதுவே வீடு பேற்றுக்கு வழி என்றும் நினைப்பவர்கள் அல்லர் இவ்வடியார்கள். எனவே, நம்பி யாருரர் பரந்த நோக்கத்துடன் உலகின் எப்பக்கத்தில், எக் காலத்தில் தோன்றியவர்களாயினும் இறைவனை அவர்கள் எந்தப் பெயரில் வழிபட்டாலும் அவர்கட்கும் அடியேன் என்று கூறுகின்றார். அப்பாலும் அடிசார்ந்தார் அடியார்க்கும் அடியேன்” என்பது அப்பாடலில் ஒரு தொடர். அப்பாலும் என்ற சொல்லுக்குக் காலம், தேசம் இரண்டையும் கடந்து, அப்பாலும் இருப்பவர்கள் என்பதே பொருள். நம் நாட்டை அல்லாத பிற நாடுகளிலும், நம் காலத்தை அல்லாமல் அதற்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்களையும் குறிக்கிறார் இவ்வடியால். இவ்வளவு பரந்த நோக்குடன் நம்பியாரூரர் "திருத்தொண்டத் தொகை: பாடியது உண்மைதான்.