பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சி. ஞானசம்பந்தன் 1台堡 சில கெல் பெற்றார் நம்பியாரூரர் பரவையாருடன் கூடி இல்லறம் நடத்திக் கொண்டே இறைவனையும் ஒருமுகப்பட்ட மனத்துடன் வழிபட்டு வாழ்ந்து வரலாயினர். எப்பொழுதும் இறைவன்பால் மனத்தைச் செலுத்தி வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெரியார் களை உலகத் துன்பம் ஒன்றும் செய்வதில்லை. நம்பியாரூராகிய அடியாருடைய குடும்பம் நன்கு நடை பெறவும் வாழ்க்கையின் அன்றாடக் கவலைகள் அவரைப் பாதிக்காமல் இருக்கவும், ஒரு வேளாளப் பெரியவர் உபகாரம் செய்துவந்தார். குண்டையூர் என்ற ஊரில் வாழ்ந்த அப் பெரியவர் நம்யியாரூரருடைய வீட்டிற்குச் செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும் கரும்பு முதலிய பலவான பொருள்களையும் அனுப்பிவந்தார். இவ்வாறு அனுப்புவ தற்கு அப் பெரியார் யாதொரு பயனையும் கருதவில்லை, இறைவனால் தடுத்து ஆட்கொள்ளப்பெற்ற ஓர் அடியார்க்குத் தொண்டு செய்கிறோம் என்று எண்ணத்தைத் தவிரக் கிழவிக்கு வேறு கருத்து ஒன்றும் இல்லை. குண்டையூர்க் கிழவர் நம்பியாரூரருக்குச் செய்து கொண்டிருந்த உபகாரம் முட்டுப்படும் நிலை வந்தது. அவருடைய பகுதியில் பஞ்சம் வந்துற்றது. விளைவு யாதும் இன்மையால் தமக்கே உணவு இல்லாமல் அவர் துயரமடைந் தாலும் அதுபற்றிக் கவலையுறவில்லை. ஆனால், ஆரூரருக் குச் செய்யவேண்டியவற்றை மட்டும் விடாது செய்துவந்தார். இதற்கும் ஒருமுறை இடையூறு ஏற்பட்டுவிட்டது. ஒன்றுமே அனுப்ப முடியாது என்ற நிலை வந்தவுடன் கிழவர் மிகவும் வருந்தத்தொடங்கி விட்டார். தம் கடமையைச் செய்ய இயலாமையால் மிகவும் வருந்தி உணவுகூட உட்கொள்ளாமல் அன்றிரவு கண் துயின்றார். கவலை இருவகைப்படும். ஒன்று தனக்கு நேர்ந்த துன்பத்தைப்பற்றிக் கவலைப்படுதல்; ஏனையது பிறருக்கு 4 إسس، ينتمي