பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16: தேசீய இலக்கியம் உபகாரம் செய்ய இயலவில்லையே என்பதால் விளையும் கவலை. இரண்டாம்வகைக் கவலையால் பெரியோர்கள் அடிக்கடி வருந்துவர். இவ்வகைக் கவலையில் தன்னலம் என்பது சிறிதும் இராது. இவ்வாறு கவலை உறுபவர்கள் மற்றவர்களுடைய கவலைகளைப் போக்க இறைவனுடைய அருளை நாடுவர். தொடர்பில்லாதவர்கள் மாட்டுச் செல்லும் அன்பைக் கருணை என்று கூறுவர். தமக்கு உறவு இல்லாத பிறர் துன்பங் கண்டு துயரடையும் அவர்கள் கருணையைக் கண்டு இறைவனும் கருணை காட்டுகிறான் இறைவன் அருளால் இவர்கள் பிறர் துன்பத்தைக் கூடுமானவரை போக்கு கிறார்கள், ஆருரருக்கு நெல் கொடுக்க இயலவில்லையே என்றறிந்த குண்டையூர்க் கிழவர் கவலைப்பட்டார். தாம் நெல் தாராவிட்டாலும் ஆரூரர் உணவில்லாமல் வருத்தப்படப் போவதில்லை என்பது கிழவருக்கு நன்கு தெரியும். எனவே, அவர் அதற்கு வருந்தவில்லை. தாம் மேற்கொண்ட கடமையைச் செய்ய முடியாத ஒரு நிலை நேர்ந்துவிட்டதே என்றுதான் அவர் கவலையுற்றார். வன் தொண்டர் திருவாரூர் மாளிகைக்கு நெல் எடுக்க, இன்று குறை ஆகின்றது என்செய்கேன் ஏயர்கோன் : ; ) என்ற கவலைதான் கிழவருக்குப் பெரிதாக இருந்தது. எனவே, அன்று இரவெல்லாம் அவர் உறங்கவில்லை. உண்ணர் மலும் படுத்துவிட்டார். கடமையைச் செய்யமுடியாத பொழுது உணவு எவ்வாறு செல்லும்? படுத்துக் கவலை யுடன் இருந்த கிழவர் கனவில் இறைவன் தோன்றினான், ஆரூரன் தனக்கு உன்பால் நெல் தந்தோம் (ஷை 14) என்று கூறிவிட்டு மறைந்தருளினான். இறைவன் கட்டளைப்படி குபேரன், குண்டையூர் முழுவதும் நெல் மலையாகக் குவித்து விட்டான். பொழுது விடிந்தது எழுந்துவந்த கிழவருக்கு ஒர் அதிசயம் காத்து நின்றது. ஊரின் எல்லைவரையும். ஒரே நெல் மலையாக இருந்தது. இனி, இந்த நெல்லை எவ்வாறு யார்மூலம் திருவாரூருக்கு அனுப்புவது என்ற வினாவிற்குக் கிழவனாரால் விடை காண முடியவில்லை.