பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தேசீய இலக்கியம் சில நெல் என்று கூறச் சற்று மனத்திடம் அதிகமாகவே வேண்டும். பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்த வனிடம் அளந்தாளாம் என்ற பழமொழியை நினைவூட்டு கிறது ஆரூரருடைய வார்த்தைகள். இந்த அடியார்கள் இறைவனிடம் கொண்டாடுகிற உரிமைக்கு இதுவும் ஓர் உதாரணம். அம்மட்டோடு இல்லாமல் இறைவனுடைய எளிவந்த தன்மைக்கும் (ஸெளலப்பியம் என்பர் வடமொழி யார் இது உதாரணமாக அமைகின்றது எவ்வளவு உரிமை கொண்டாடினாலும் அடியார் களிடத்து இறைவன் வேண்டுவது தூய்மையான அன்பே யாகும். அந்த அன்புடையவர்கள் எவ்வளவு உரிமை வேண்டினும் அவன் தரக் காத்து நிற்கின்றான். அவன் கருணை மழைக்குக் குறையில்லை. அதனை அனுபவிப் பவர்கள் மனநிலைக்கு ஏற்றபடி அது பயன் தருகிறது. ஆற்றில் நீர் நிறைந்து ஒடினாலும் அவரவர் கொண்டு செல்லும் பாத்திரத்தின் அளவுக்கு ஏற்பவே முகந்துவர முடியும். கீதாஞ்சலியின் முதற் பாடலில் தாகூர் கூறிய கடைசி வரிகள் நினைவிற்கு வருகின்றன : 'இறைவனே! உனது எண்ணரிய கருணையின் பரிசுகள் என்னுடைய சிறிய கைகளின் மூலமே கிடைக்கின்றன. என்றாலும், உன் கருணை மழைக்குக் குறைவே இல்லை. இந்தச் சிறியவனிடம் இன்னும் இடம் இருக்கிறது." மாணிக்கவாசகர் தாம் அருளிய திருவாசகத்தில் வழங்கு கின்றாய்க்கு உன் அருள்.ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன். விக்கினேன் வினையேன் விதியின்மை யால் (திருவாசகம்-அடைக்கலப்பத்து-10) என்று கூறுவதும் அறிதற்குரியது. இவ்வுண்மையை எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் வாழ்ந்த பெரியோர்கள் அறிந்து அதனைப் பயன்படுத்திக்