பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$68 . - தேசிய இலக்கியம் அனுபவம் வாய்த்திருந்தமையின் ஐயத்திற்கு இடமில்லை இத்தகைய ஒர் அதிசயத்தை அவரவர்கள் வாழ்நாளிலேயே கண்டதில்லை எனப் பேசிக்கொண்டனர். தெருவெல்லாம் நெல்மலையாக ஆன அதிசயத்தைப் பேசித்தீர்த்த பிறகு அடுத்துத் தோன்றும் வினா. இந் நெல் யாருடையது என்பதுதானே? பலருக்கும் இவ் வினா தோன்றி விட்டது. ஒரு சிலர் விடை அறிந்தவர்களாகலின் பலர் வினாவுக்கு இவர்கள் பதில் கூறினார்கள். என்ன விடை? "அவ்விரவு புலர்காலை ஆரூரில் வாழ்வார்கண்டு எவ்வுலகில் விளைந்தனகெல் மலைஇவை? என்று அதிசயித்து கவ்விதமதர்த் திருகோக்கின் கங்கைப்புகழ்ப் பரவையார்க்கு இவ்வுலக வாழவரும் கம்பிஅளித் தன' என்பார் 兹 (பெ. பு.-ஏயர்கோன்; 26) "மான்போன்ற கண்ணை உடையவரும் பெண்களாலும் புகழப்படுபவருமாகிய பரவையாருக்கு நம்பியாருரர் அளித்த நெல் மலையாகும் இது? என்று கூறினார்களாம் நெல்லின் அளவையும் கிடக்கும் நிலையையும் பார்த்தவுடன் இது மனிதன் முயற்சியால் கிடைத்தது அன்று என்பதை யாவரும் அறிந்தனர். என்றாலும், தங்கள் ஊர்ப் பெண்ணாகிய பரவையாருக்கு அவளுடைய கணவர் அளித்தது என்று கூறுவதில் அந்த ஊரவருக்கு ஒரு தனி மகிழ்ச்சிபோலும். இது பழந் தமிழ்நாட்டின் பண்பாடுகளுள் ஒன்றாகும். தங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் நல்ல நிலையில் வாழ்கிறார் என்றால் அதில் ஊரார் அனைவரும் பங்குகொள்வார். தங்கள் ஊரைச் சேர்ந்த பெண் ஒருத்தி நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டால், ஒவ்வொருவரும் அந்தப் பெருமையில்