பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t அ. ச. தான்சம்பந்தன் if: கணவனுடைய உடன்பாடு உறுதியாகக் கிடைக்கும் என்ற உறுதிப்பாட்டுடன் இதனைச் செய்துள்ளார். தற்காலம் இல்லறம் நடத்தும் நம்மில் பலருக்கு இது ஒரு நல்ல படிப்பினையாகும். இத்துணைச் சிறந்த முறையில் இல்லறம் நடத்திவரும் தம்பிரான் தோழர், இறைவன் உறையும் பல தலங்களையும் சென்று வணங்க முடிவு செய்துகொண்டு புறப்பட்டார். திருநாட்டியத்தான் குடி என்பது சோழநாட்டில் உள்ள ஓர் அழகிய ஊர். அதில் கோட்புலியார்’ என்ற அடியார் வாழ்ந்து வந்தார். நம்பியாரூரரை அழைத்துச் சென்று சிறந்த முறையில் உபசரித்தார். இறுதியாக, தாம் பெற்ற 'வனப்பகை', 'சிங்கடி என்ற இரு பெண்களையும் நம்பி யாரூரர், மனைவியராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஆரூரர் அவர்கள் இருவரையும் தாம் பெற்ற மக்கள் என்று கூறி, அவர்கட்கு வேண்டும் பரிசில்களையும் தந்து மகிழ்ந்திருந்தார். தாம் அவ்விருவரை யும் மக்களாய் ஏற்றுக்கொண்டமைக்குப் பல தேவாரங்களில் தம்மை வனப்பகையப்பன்', 'சிங்கடியப்பன்' என்றும் பாடி யுள்ளார். இதனையடுத்துத் திருப்புகலூர் என்ற ஊரில் சென்று இறைவனை வணங்கினார். அது பங்குனி மாதம். பங்குனி உத்திரத் திருநாள், ஆருளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெறும். ஊரில் திருவிழா நடைபெறும்பொழுது சிறந்த முறையில் இல்லறம் நடத்தும் ஒவ்வொருவருடைய வீட்டிலும் விருந்தினர்கள் வந்து நிரம்பிவிடுவார்கள். அவர் களைத் தக்க முறையில் உபசரிக்க வேண்டுமானால் அனைத் திற்கும் பணம் வேண்டுமன்றோ? பரவையார் செலவு செய்து இல்லறத்தை நன்கு நடத்த வேண்டுமாயின் அதற்குரிய பொருளை நம்பியாரூரர் தேடித்தரவேண்டும் அன்றோ? பரவையார் பணய வேண்டும் என்று வாய் திறந்து கூறாவி டினும் ஆரூரர் தம் கடமையை நினைத்துக்கொண்டார்.