பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தேசிய இலக்கியம். இம் மாதிரி சந்தர்ப்பங்களில் இவ் வடியார்கள் நடந்து கொள்ளும் முறை அலாதியானது. நலம், தீங்கு என்ற இரண்டிலும் இறைவன் உதவியையே நாடுபவர்கள் இவர்கள். அவனுடைய திருவருளால் ஒரு திருமணம் தடைப்பட்டது, மற்றொரு திருமணம் நடைபெற்றது. முதலாவதைத் தடுத்து. இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்தவனுடைய பொறுப்புத்தானே அவ் வாழ்க்கை நன்கு நடைபெறப் பார்த்துக்கொள்வதும் எனவே, அந்த இல்லறம் முட்டுப்படும் பொழுது இறைவனிடமே சென்று முறையிடுகிறார்கள். கேள் தரப்படும் தட்டு, திறக்கப்படும்’ என்று மற்றோர் அடியார் கூறியதை இந் நாட்டு அடியார்கள் வாழ்க்கையில் செய்தே காட்டிவிட்டனர். கேட்கும் முறையில் கேட்டால் கருணை வடிவினனாக உள்ள இறைவன் தாராமல் இருப்பானோ? பஞ்சமும் நோயும் நின் மெய் அடியார்க்கோ?’ என்று பாரதி பாடியதை நினைவிற்குக் கொணர்ந்தால் ஆரூரருடைய செயலில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதை உணரலாம். திருப்புகலூரில் நடைபெற்ற அதிசயத்தைக் காண்போம். இவர் அலாது இல்லையோ பிரானார்? திருப்புகலூரில் நுழைந்ததும் தமக்குப் பொருள் வேண் டுமே என்ற நினைவு வந்துவிட்டது ஆரூரருக்கு. இறைவ னிடம் தம்முடைய மனக் கருத்தை நிறைவேற்றும்படி பாடினார் எண்ணிய எண்ணியாங்கு எய்துவர், எண் னியர் திண்ணியராகப் பெறின் என்பது பொய்யாமொழி யன்றோ? எனவே, இறைவனிடம் ஒருமுகப்பட்ட மனத் துடன் ஆரூரர் வேண்டினார். உடனே அவருக்குச் சற்று உறக்கம் வந்தது. அருகேயுள்ள மடத்திற்குச் சென்று உறங்க விருப்பம் இல்லாமல் திருக்கோயிலின் வாயிலிலேயே தங்கிவிட்டார். அக கோயிலுக்குத் திருப்பணி செய்வதற் காகச் செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன. மாப்பிள்ளைக் கோலத்துடன் எங்கும் சென்று வரும் நம்பியாரூரர் அந்தச் செங்கற்களில் சிலவற்றைத் தலைக்குத் தலையணைபோல்