பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 தேசிய இலக்கியம். வெற்றி விடையார் அருளாலே வேம்மண் கல்லே விரிகடர்ச்செம் - பொன்திண் கல்லா பினகண்டு புகலூர் இறைவர் அருள்போற்றி" - (பெ. பு-ஏயர்கோன், 50) தலைக்கு வைத்திருந்த கற்கள் அனைத்தும் பொன்னாக மாறிவிட்டமை கண்டு ஆருரர் பெரு மகிழ்ச்சி அடைந்தார். இறைவன் திருவருளை நினைந்து நினைந்து அன்பு பெருகினார். அவரையும் அறியாமல் பாடல் புறப்பட்டது, உலகத்து மக்களை ஒரு கணம் நினைந்து பார்த்தார். கேவலம் ஒரு வேளை உணவுக்கு வேண்டி தம்மைப்போன்ற மக்கள் பின்னே சென்று வாயில் வந்ததை எல்லாம் கதி இரக்கின்றதைக் காண்கின்றோம்; என்றுமே வாழ்நாளில் தந்து பழக்கம் இல்லாத ஒருவனைப் பாரி என்று புகழ்ந்தும், நடப்பதற்கும் சக்தியற்ற ஒருவனைப் பீமன் என்றும், அருச்சுனன் என்றும் நாக்கில் நரம்பு இல்லாமல் புகழ்ந்தும் பேசுகிறார்கள். ஏன்? இப் புகழ்ச்சியில் ஈடுபட்ட அவர்கள் ஒரு வேளை உணவு தரமாட்டார்களா என்ற எண்ணத்தால் தானே? இக் காட்சி நம்பிய4ரூரர் மனத்தில் எழுகிறது. ஐயோ எத்துணைப் பைத்தியக்கார உலகம்? அனைத்துலகை யும் ஆக்கி அளித்து, அழிப்பவனாகிய இறைவன் எல்லாச் செல்வங்களையும் அளிக்கக் காத்து நிற்கிறான். ஆனால், அவனிடம் சென்று வேண்டுவார் ஒருவரும் இலர். அப்படி வேண்டினாலும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று தம் குறை பாடுகளைக் கூறினவுடன் அவை சரிப்பட்டுவிட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், தம்மைப் போன்ற மனிதர்களிடத்து ஐந்து ரூபாய் கடன் வாங்குவதற்காக நூறு தடவை நடககவும் அஞ்சமாட்டார்கள். மனிதர்களிடம் சிறு உதவி பெற இத்தனை முறை நடக்கின்ற இவர்கள், ஆண்டவனிடம் போகிறபோக்கில் கேட்டது உடனே கிடைத்துவிடவேண்டும் என்று மட்டும் ஏனோ எதிர்பார்க் கிகார்கள். இவர்கள் அனைவரையும் தினைந்த தம்பிரான் தோழர் இதே பாடுகிறார்: