பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1ግን "தம்மை பேபுகழ்ந்து இச்சை பேசினும் சார்கி னும்தொண்டர் தருகிலாப் பொய்மை யாளரைப் பாடா தேஎங்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்: இம்மை வேதரும் சோறும்கூ றையும் - ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுற வில்லையே" (சுந்தரர் தேவாரம், 340) இறைவனிடம் அன்பு செய்பவர் பலவகைப்படுவர். இந்த உலகத்தில் தாம் விரும்பும் இன்பங்கள் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்று வேண்டுபவர் சிலர். இம்மை பற்றிக் கவலைப்படாமல், மறுமையில் இன்பம் வேண்டு மென்று விரும்புபவர் சிலர். எத்துணைச் செல்வம் உடையவ ரேனும் நம்மைப் போன்ற மனிதரிடம் நாம் பெறுவது அளவால் குறைந்தே இருக்கும். ஏன் எனில், நாம் விரும்புவன அனைத்தையும் தரும் இயல்பு பாரி போன்ற ஒருசிலர் தவிரப் பிறரிடம் இருத்தல் அரிது. எனவே, அவர்களாக விரும்பிக் கொடுக்கும் ஒரு சிறு பகுதியைப் பெற இத்துணை முயற்சி எடுத்துக்கொள்ளும் நாம், விரும்பிய அனைத்தையும் தரக் காத்திருக்கும் இறைவனிடம் பொறுமை யுடன் பல முறையும் கேட்க ஏனோ அஞ்சவேண்டும்? நம்மைப் போன்றவர்களிடம் இரக்கச் செல்லும்பொழுது உள்ள மானத்தை விற்றுவிட்டுச் செல்ல நேரிடுகிறது. ஆனால், அனைத்துலகுக்கும் தாயான இறைவனிடம் கேட்க யாரும் அவமானப்பட வேண்டியதில்லை அல்லவா. இவை அனைத்தையும் மனத்திற் கொண்டே ஆரூரர். இம்மையுல கத்தில் வேண்டப்படுவனவாகிய ச்ோறும் உடையும் தரும் இறைவன், மறுமை உலக இன்பமும் தரத் தயாராக உள்ளான். அடுத்து வீட்டின்பமும் தானே கிடைக்கும் என்ற கருத்துடன், இம்மையிலே தரும் சோறும் கூறையும் தே.ே-12