பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 188 வகுத்தார்கள். அந்த ஒரு நாளிலாவது ஆண்டவனை நினைப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்கள். அனைத்தும் இறைவனுடைய படைப்புகள்தாம். முன்னம் மதி, கனலி என்று இவற்றைப் படைத்தான் அவன். இருபத்தேழு விண்மீன்களையும் அவன்தான் படைத்திருக் கிறான். அப்படியிருக்கத் திருவாதிரை நட்சத்திரம் மட்டும் இறைவனுக்கு உகந்தது என்று சொல்லுவதன் கருத்தென்ன? இதே கருத்தைத்தான் முத்தொள்ளாயிரம் என்ற நூலில் ஒர் ஆசிரியர் விளையாட்டாகப் பேசுகிறார். சந்திரன், சூரியன், விண்மீன்கள் ஆகிய அனைத்தையும் படைத்த இறைவனை ஆதிரையான்! ஆதிரையான் என்று-இந்த உலகம் குறிப்பிடு வதன் கருத்து யாது? இவ்வாறு கேட்பதன் மூலம் அனைத்தும் அவனுடைய படைப்பேயாகும் என்ற கருத்தைக் கூறுகிறார் ஆசிரியர். அவற்றுள்ளே தனியாக ஒன்றை அவனுக்கு ஏற்றது என்று சொல்லுவதன் மூலம், அந்த நட்சத்திரம் வரும்பொழுது நம்மையும் அ l ய | ம ல் ஆண்டவனை நினைக்கின்றோம். மனித மனத்திற்கு உள்ள தனிப்பட்ட ஒர் இயல்பு அது. சில பொருள்களைச் சில பொருள்களோடு சம்பந்தப் படுத்தி, மனித மனம் பழகிவிடுகிறது. எப்பொழுதாவது நம்முடைய நண்பர் ஒருவரை ஒரு தனிப்பட்ட உடையிலே சந்தித்துப் பழகியிருப்போமேயானால், அதேபோல உடை யுடுத்திய மற்றொருவரைப் பார்க்கும்பொழுது, நண்பருடைய நினைவு வருகிறது. அதனை மனித மனம் இயல்பாகப் பெற்றிருக்கிறது. அத்தக் காரணத்தினால்தான் மனித மனத்தின் இந்த இயல்பை அடிப்படையாக வைத்து இந்த விழா நாள்களை வகுத்தார்கள். ஆண்டில் ஒரு நாளைக்குச் சிவராத்திரி என்று சொல்லுவதன் மூலமாக, ஆண்டவனை அன்று முழுமனத்தோடு நினைப்பதற்கு நமக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தார்கள். மற்ற நாள்களில் இறைவனை நினைக்க வுேண்டா என்பது கருத்தன்று. ஆனால் இன்றைக்குக்