பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f86 . . தேசிய இலக்கியம் காணலாம். அறுவை மருத்துவம் செய்கின்ற மருத்துவர் என்ன செய்கிறார்? நம்முடன் கூடவே பிறந்து வளர்ந்த உடலைப் பெரிய கத்தியால் வெட்டிக் கருணை இல்லாதவர்போல் துன்பம் செய்கிறாரே, அது முறையா? அறுவை மருத்துவம் செய்பவரை நாம் வெறுக்கிறோமா? சிறு கத்தியால் ஒருவர் நம்மைக் குத்தினாலும் அவரை வழக்கு மன்றத்தில் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தருகிறோமே! அப்படி இருக்கப் பெரிய கத்தியால் நம் உடலைச் சோதிக்கும் மருத்துவருக்கு எவ்வளவு பெரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்? அவ்வாறு செய்கின்ற பைத்தியக்காரர் யாரேனும் உண்டா? ஏன் ஒருவரும் அவ்வாறு நினைக்கவில்லை? சிறு கத்தியால் தம்மைக் குத்துபவர் நமக்குத் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இத்துகிறார். பெரிய கத்தியால் அறுக்கும் மருத்துவர் நம்மை. வாழவைக்கும் கருத்துடன் அறுக்கிறார். சிேறிய கத்தியால் குத்தப்பட்ட பொழுது பிழைத்துக்கொள்ளலாம். வாழவைக்கச் செய்யப்பெற்ற அறுவை மருத்துவரைத் தண்டிப்பார் ஒருவரும் இலர்! ஏன்? செய்யப்பட்ட செயலைப்பற்றி அதிகக் கவலை கொள்ளாமல் செய்தவரின் மனக்கருத்தை ஆராய்ந்தனர் அறிவுடையோர். வாழவைக்கும் கருத்துடன் அறுவை செய்யப் பெற்றமையின் அவரைப் போற்றினர். அவரால் வாழவைக்க முடியாதபொழுதுங்கூட உலகம் அவரைப் போற்றியது. கொல்லும் கருத்துடன் குத்தினமையின் உலகம் குத்தியவரைத் துர ம்றியது. இவற்றால் அறியப்படுவது ஒன்றுண்டு எனில் அது யாது? செய்யப்படும் செயலைப்பற்றிக் கவலையுறாமல் செய்பவர் மனக்கருத்தை மட்டுமே காண்டல் வேண்டும். அன்பின் அடிப்படையில் கல்லால் அடித்தவரும் தந்தையின் காலை வெட்டியவரும் போற்றப்பட்டனர். தவத்தைக் கலைக்கும் தவறான கருத்துடன் மலர்களை எறிந்தாலும் அச்செயல் பழிக்கப்பட்டது. ஆகையினால், ஆண்டவனை நினைக்கும்பொழுது நினைக்கின்ற நினைவு தூய்மையுடையதாக இருக்க