பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 189 வேண்டும். அந்த அன்பின் வெளிப்பாடக, பரிணாமமாக வெளியே வருகின்றது எதுவாகவேனும் இருக்கலாம். அது அபிஷேகமாக இருக்கலாம்; ஆராதனையாக இருக்கலாம்; இல்லை, வசவாகக்கூட இருக்கலாம்; அந்த அளவுக்கு இந்த நாட்டிலே உரிமை கொடுத்திருந்தார்கள் என்பதைத்தான் "செந்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்பான்’ என்ற அருணகிரிப் பெருமான் திருவாக்கிலே காணுகின்றோம். செந்தமிழால் வைகின்றான் ஒருவன். ஆனால், வைகின்ற வனுடைய மனோநிலை என்ன? எல்லை மீறிய அன்பினாலே குழந்தை தாயைத் திட்டவில்லையா? எந்தத் தாயாவது உடனே கோபித்துக்கொண்டு அந்தக் குழந்தைளை எடுத்து எறிந்துவிடுகிறாளா அல்லது தண்டனை கொடுக்கிறாளா? இல்லையே. குழந்தையினுடைய மனோநிலைமையைப் பார்க்கலாம். வாய் ஏசத்தான் செய்கிறது. ஆனால், மனம் அன்பால் பெருகி வழிகின்றது. இப்படியே மறக் கருணையைப் பற்றியும் நினைத்தர்ர்கள் இந்த நாட்டிலே தந்தை மகனை அடிக்கின்றான். சில சமயங்களிலே மனம் மிகவும் நோவும் படியான சொற்களைச் சொல்லி ஏசுகின்றான். எந்த மகனாவது தந்தையின் மேல் வழக்குத் தொடுக்கலாம் என்று போனதுண்டா? ஒரிருவர் போயிருக்கலாம். ஆனால், அவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்; மனிதத் தன்மைலிருந்து நீங்கியவர்கள். அவர்களைப்பற்றிக் கவலை யில்லை. பொதுவாக நோக்குமிடத்து யாரும் அதைத் தவறாகக் கருதுவதில்லை. ஏன்? தந்தை ரசத்தானே செய்தான்? அடிக்கத்தானே செய்தான். இச் செயல்களைப் பற்றிச் சிந்தியாமல், பின்னே இருக்கின்ற தந்தையின் மனோ நிலையைக் கண்டார்கள். அந்த மனோநிலை என்ன? மகனை வாழவைக்கவேண்டும் என்ற மனோநிலை திருத்தவேண்டு மென்ற மனோநிலை. இதனால்தான் இந் நாட்டவர் மனத்தின் அடிப்படைலே இருக்கின்ற எண்ணத்தைப்