பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 - தேசிய இலக்கியம் பெரிதாகக் கருதினார்களே தவிர, செயலைப் பெரிதாகக் கருத வில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். - இதை உணர்ந்துகொண்ட பிறகு ஆண்டவனுக்கு இத்தனை பெயர் கொடுத்த காரணங்களும், ஆண்டவனைப் பற்றி இத்தனை கதைகள் எழுந்த காரணங்களும் நமக்கு நன்கு விளங்கும். பல கதைகளைப் பார்த்தால் இது என்ன பைத்தியக்காரக் கதைகள் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், க.கையின் அடிப்படையில் இருக் கின்ற சாரத்தை ஆராய்ந்து பார்ப்போமோயானால், இந்த நாட்டவர்களுடைய பண்பாட்டை விளக்கக்கூடிய கதைகளாக அவை அமையக் காண்கின்றோம். அந்த முறையிலே சிவன் என்று சொன்னாலும், வேறு எந்தப் பெயர் கொண்டு சொன்னாலும் தவறில்றை. அவன் நாமரூபம் கடந்தவன். கற்பனை கடந்த ஒருவன். அவனுக்கு நாமம் கற்பித்தார்கள்: ரூபம் கற்பித்தார்கள். கற்பனைக்கு உட்பட்டவனாகச் செய்தார்கள் எத்தனை எத்தனையோ வரலாறுகள் எல்லாம் ஆக்கித் தந்தார்கள். மிக ஆழ்ந்த கருத்தை எடுத்து நமக்குத் தத்துவரூபமாக வெளியிட்டவர்களுள் திருமூலர் ஒருவர். முதன்முதலாக அன்பே சிவம் என்ற ஒரு சொல் தோடரை அவர்தாம் நமக்குத் தந்தார். 'அன்பும், சிவமும் இரண்டு என்பர் அறிவிலார். அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்’ என்று பாடினார். இரண்டு தனிச் சொற்கள் இருக்குமே யானால் இரண்டு பொருள் உண்டோ என்று யாரும் ஐயப்படு வார்கள். அப்படிச் சந்தேகப்படாதே என்று சொல்லுகிறார் திருமூலர், அன்பு, சிவம் என்பன இரண்டு வேறு வேறு சொற்கள் என்றால், அவற்றின் பொருளிலும் கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடு இருக்குமே என்று கருதுபவர்க்கு அதுவும் இல்லை என்றார். அன்பும் சிவமும் இரண்டு என்று சொல்லுபவர்கள் யாரேனும் இருந்தால் அவர்கள் அறிவில்லாத முட்டாள்கள் என்றே சொல்லிவிட்டார். அப்படியானால் ஏன்