பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 - தேசிய இலக்கியம் வதற்காக அன்றோ வழிப்படுத்தினானா? அவனுடைய கைகள் வழிப்படுத்தின. மலரை எடுத்து ஆண்டவன்மேல் தான் போட்டன. ஆனால், உள்ளம் எங்கே? பூசையில் மனம் ஒன்றியதா என்ற சந்தேகம் வத்துவிட்டது திருநாவுக் கரசருக்கு. ஐயத்துடன் பார்க்கும்பொது இவனுடைய பூசை எதற்குப் பயன்படும் என்று நினைத்து இதோ பாடுகிறார். "பொக்கம் மிக்கவர் பூவும் ருேங்கண்டு கக்கு நிற்பர் அவர்தமை காணியே " ஒவ்வொருவர் உள்ளத்துள்ளும் இருந்துகொண்டு அவரவர் பூசையை ஏற்றுக்கொள்கிறானே ஆண்டவன் அவனுக்குத் தெரியாதா இந்தப் பூசையினுடைய உண்மைத் தன்மை? ஆகவேதான். நெக்கு நெக்கு உருகி நினைத்தால் இறைவன் பூசையை ஏற்றுக்கொள்ளுவான் என்று பாடுகிறார். அன்பு என்பதை அடியோடு மறந்துவிட்டு ஏதோ ஒர் இலாபத்தைக் கருதி ஒருவன் பூசை செய்கிறான். இப்படிப்பட்ட ஒரு பூசையைக் கண்டு உலகம் ஏமாறலாம். என்ன பூசை என்ன பூசை அடடா ஏன்று ஆச்சரியப்படுகிறார்கள். திருநாவுக்கரசர் ஒரு சிவப்பு விளக்குப்போட்டுக் காட்டு கின்றார். இந்தப் பூசையைக் கண்டு ஏமாந்துவிட வேண்டா! அது அன்பே சிவமான பூசை அன்று. சிவமோ அன்போ அங்கில்லை. மிச்சம் என்ன? பூ இருக்கிறது. கனி இருக்கிறது. தேங்காய், பழம் இருக்கிறது; செய்கின்றவன் இருக்கிறான்; ஆனால் ஆண்டவன்தான் அங்கு இல்லை. அப்படியானால், ஆண்டவன் அங்கு இல்லாமலே போய் விட்டானா என்றால் இருக்கிறான் என்கிறார் நாவுக்காசர். எங்கே? இறைவனை மறந்துவிட்டு ஆனால் அவன் விக்கிரகத்தின்மேல் மலரை எடுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறானே அந்தப் பூசைக் காரன் எதிரே ஆண்டவன் இருக்கிறான். இருந்து கொண்டு என்ன செய்கிறானாம்? சிரிக்கின்றானாம்: உள்ளுவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிகின்ற வனாகிய என்னையே நீ ஏமாற்றப் பார்க்கிறாயே!” என்று