பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 197 சிரிக்கின்றானாம். பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்கின்றானாம். அன்பில்லாது செய்யப்படுகின்ற பூசையை எவ்வளவு அழகாகத் திருநாவுக்கரசர் பாடு கின்றார். "செக்கு நெக்கு கினைப்பவர் கெஞ்களே புக்கு கிற்கும் பொன்னார் சடைப் புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீருங்கண்டு கக்கு நிற்பர் அவர்தமை காணியே" - - (திருநாவுக்கரசர்தேவாரம், 892). இனி அடுத்த ஒரு மனநிலையைக் காணவேண்டும், ஏன் அன்பே சிவம் என்று. சொல்ல வேண்டும்? கல்வியே சிவம் என்று சொல்லக்கூட்ாதா? பண்பே சிவம் என்று சொல்லக் கூடாதா? நன்றாகச் சொல்லியிருக்கலாமே. எல்லாம் ஆண்டவனுடைய வடிவம். எல்லாம் அவனுடைய நிலை என்றால், ஏன் அறிவே சிவம் என்று சொல்லக்கூடாது? ஏன் கல்வியே சிவம் என்று சொல்லக்கூடாது? இதற்கும் காரணம் கண்டார்கள் நம்முடைய பெரியவர்கள். உலகத்தில் ஆதி மனிதன் தோன்றினானே அந்தச் சூழ்நிலையிலிருந்து அவனுடைய வளர்ச்சியை இரண்டாகப் பகிர்ந்து விட்டார்கள் ஒன்று அவனுடைய அறிவு வளர்ச்சி; மற்றொன்று அவனு டைய அன்பு (உள்ளம்) வளர்ச்சி. மனிதனைப் பொறுத்த மட்டிலே இரண்டும் மிகமிகத் தேவை. அறிவும் வேண்டும்; அன்பும் வேண்டும். அறிவின்றி வாழ்கின்ற வாழ்க்கையும் வாழ்க்கை ஆகாது. அன்பில்லாமல் வாழ்கின்ற வாழ்க்கையும் வாழ்க்கையாகாது. அப்படியானால் எது மிகுதியாகத் தேவை? மனித உடற் கூற்றை ஆராய்ந்து பார்த்தால்கூட அந்த உண்மை விளங்கும். ஆசிட்' என்று சொல்லப் பெறும் அமில சக்தியும் நம்முடைய உடம்பில் உண்டு. "ஆல் கலி' என்று சொல்லப்பெறும் காரசக்தியும் நம்முடைய உடம்பில் உண்டு. ஆனாலும், இந்த இரண்டு சக்திகளிலே ஒன்று சிறிது மிகுதி யாக இருக்க வேண்டும். அமில சக்தி மிகுதியானால் வயிற்றில் பல வேண்டாத தொல்லைகள் ஏற்படும். இரண்டும் வேண்டும் என்றாலும் கொஞ்சம் அதிகப்படியாக இருக்க வேண்டியது