பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 193 என்னிடம் 2 சட்டைகளே இருக்கின்றன என்றால், மற்றவர் கேட்டால் ஒருசட்டையைக் கொடுத்துவிடு என்று சொன்னார் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டு என்று சொன்னார் ஒருவர். பிறருடைய துன்பத்தைக் கண்டு அதனைப் போக்க முயலாமல் இருக்கக் கூடாது என்கிறார்கள் சிலர். பெரியவர் தம் நோய் போல் பிறர்நோய் கண்டு உள்ளம் எரியின் இழுதாவர் என்று சொன்னார் ஒருவர். இதில் ஏதாவது நன்மை உண்டா? நம்மிடம் உள்ள உணவு நமக்குக் கூடப் பற்றவில்லையென்றாலும் அடுத்த வனுக்குக் கொடுத்துவிடு என்று சொன்னவர்கள், நமக்கு நன்மையா சொன்னார்கள்? இல்லையே? நம்முடைய நோயைப் போக்க மருந்து கண்டு பிடித்தவர்களை மறத்து விட்டோம். ஆனால், இப்படி நமக்கு வேண்டாதவற்றைச் சொன்னார்களே இவர்களைத் தவறாமல் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறது உலகம்! இது என்ன புதுமை? நமக் கிருக்கிற இரண்டு சட்டையைக் கொடுத்துவிட்டால் நமக் கென்ன நன்மை? நம்முடைய சாப்பாட்டை எதிரில் இருக் கிறவனுக்குக் கொடுத்து விட்டால் நமக்கென்ன நன்மை? நம்முடைய கன்னத்தில் அறைபவருக்கு அடுத்த கன்னத்தைத் திருப்பிக் காட்டினால் நமக்கு என்ன நன்மை? ஒரு நன்மை யும் இல்லை. அப்படியிருந்தும் இதைப் பெரிதாக நினைத்து உபதேசம் செய்தார்களே அந்தப் பெரியவர்களை உலகம் மறக்கவேயில்லை உலகத்திலே நன்றாக வாழ்வதற்கு இவர்கள் நமக்கு வழி வகுத்துக் கொடுத்தார்களா? இல்லை! இவர்களுள் ஊசி மருந்து கண்டுபிடித்துக் கொடுத்தவர் உண்டா? இல்லை, வேகமாக ஊருக்குப் போவதற்கு வழி வகுத்துக் கொடுத்தவர் உண்டா? ஒன்று மில்லையே. பயன்படக் கூடிய காரியங்களைச் சொன்னவர் களையெல்லாம் மறந்து விட்டோம். இப்படிப் பயன்படாத உபதேசங்களைச் சொன்னவர்களையெல்லாம் நினைவு வைத்துக்கொண்டிருக்கிறேர்மே என்ன காரணம்? அதுதான் அடிப்படிை.