பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தேசிய இலக்கியம் "வேதம் ஒதில் என் வேள்விகள் செய்யில் என் திே நூல் பல கித்தம் பயிற்றில் என் ஓதி அங்கம் ஓர் ஆறும் உணரில் என் ஈசனை உள்கு வார்க்கு அன்றி இல்லைகே" "கன்று சோற்கில்என் பட்டினி யாகில் என் குன்றம் ஏறி இருந்தவம் செய்யில் என் சென்று நீரில் குளித்துத் திரியில் என் ஒன்றும் ஈசன் என் பார்க்கு அன்றி இல்லையே” 'கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை ஆடி னாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் ஒடும் நீரினை ஒட்டைக் குடத்து அட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனோடு ஒக்குமே." கோடி தீர்த்தம் குளித்து அவை ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் என்ற சொல்லைப் பயன்படுத்துவத னாலே இவ்வளவையும் பயனற்றதாக ஆக்குகிறார் திருநாவுக்கரசர். இனி, இதே கருத்தைப் பிற்காலத்தில் வந்த ஒரு புலவர் அழகாகப் பாடுகிறார். பாசவதைப் பரணி" என்ற நூலில் இன்னும் கொஞ்சம் சுவைப்படுத்தி இதைக் கூறுகின்றார். ஒருவன் வழிபாடு அதாவது பூசை செய்ய வேண்டுமென்று நினைத்தான். ஏழ் கடல்களிலுள்ள தீர்த்தத்தை யெல்லாம் கொண்டு வந்து சேர்த்தான். சங்கல்பம் சொல்லும்போது சொல்லுகிறோமே. கங்கை முதலிய அத்தனை ஆறுகளிலே கிடைக்கின்ற தீர்த்தங்கள் அத்தனையும் கொண்டுவந்து சேர்த்தான். அவற்றை இறைவிக்கு அபிஷேகம் செய்தான். இறைவியின் மனம் குளிரவில்லையாம்! அன்பன் மனம் நொந்துவிட்டான். இவ்வளவையும் செய்தேனே! பெருமாட்டி, ஏற்றுக்கொள்ள உனக்கு மனமில்லையா? என்று வருந்நி இரண்டு சொட்டுக் கண்ணிர்விட்டான். இறைவி மனங் குளிர்ந்துவிட்டானாம்.