பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 ജേ? ഞെകl இல்லை. தன்னலத்தைப் பெருக்குவதன் மூலம் அந்த விதையையே இவன் தின்று வாழ்ந்து கொண்டிருக்கிறானா என்று ஆண்டவன் பார்த்துக்கொண்டேயிருக்கிறான். இவன் அந்த விதையைப் பெரிதாக ஆக்கிவிட்டான் என்றால் அதினை அறியும் அடையாளம் என்ன? அவனுடைய கண்களிலிருந்து கண்ணிர் ஆறாகப் பெருகுகின்றது, அதைக் கண்டதும் மகிழ்ச்சியடைகிறான் இறைவன் என்ற கருத்தைத் தான், "என்.பாவம் ஆறு கடல் ஏழிருந்தும் அவற்றிலே எல்லாம் அபிஷேகம் கொள்ளப் பெருமாட்டி திருவுளம் கொண்டதில்லை. ஆனால், அன்பாளருடைய கண் அருவி இருக்கிறதே அதிலே குளிக்க விரும்புகிறாள்' என்று இவ்வளவு அழகாக அந்தப் பாசவதைப் பரணிப் பாடல் எடுத்துக் கூறுகின்றது. இந்த அன்பு எப்படி எப்படி எல்லாம் வெளிப்படுகிறது? - மனிதர்க்கு எது இன்றியமையாதது என்ற வினாவை யெழுப்பி, அன்பு ஒன்றுதான் என்று வள்ளுவர் கூறுகிறார். அன்பு இல்லையானால், மனிதன் வாழ்ந்தவனாகவே கருதப் பட மாட்டான். அன்பில்லாதவனுடைய மனத்திலே எதுவும் வளர முடியாது என்பதைச் சமயம் வரும்போது வள்ளுவர் இடித்துக் கூடச் சொல்லுவார். ஏன், வைதுகூடச் சொல்லுவார். வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று: என்று சொல்கிறார். அன்பில்லாதவனுக்கு வாழ்வே இல்லை என்பதை இதைவிட அழுத்தமாக வேறு யாரும் சொல்ல முடியாது என்பதை அறிந்துகொள்கிறோம். இத்துணைச் சிறந்த அன்பைப் பெற்றுவிட்டான் ஒருவன் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மேலே அது எப்படு விரிகின்றது? கண்ணுக்குத் தெரியாத சிறிய ஆல விதை வளர்ந்து ஒரு பெரிய முடிமன்னன் படையுடன் வந்து தங்கியிருக்கப் பெரு நிழலைத்தந்திருத்தல்போல, இவனிடத்திலே முன்னர்க் கொடுக்கப்பட்ட அந்த அன்பு என்ற சிறு விதை விரிந்து, விரிந்து மற்றொரு மூன்றெழுத்துப் பொருளாக பரிணமிக் கிறது. அன்பு என்ற சொல்லும் மூன்று எழுத்துக்களை