பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சி. ஞானசம்பந்தன் 205 உடையதுதான். அதன் வளர்ச்சியாக உள்ளதும் மூன்று எழுத்துக்களை உடையதுதான். அன்பு என்ற சொல் விரியுமேயானால், அது அருள் என்ற சொல்லாக வளர் கிறது. இரண்டுக்கும் வேறுபாடு கண்டார்கள் நம்மவர்கள். அன்பு பழுத்தால் சிவமாயிற்று என்று சொன்னாரே திருமூலர். அந்தச் சிவத்திற்கு வேறொரு பெயரும் கொடுத்தார்கள். அன்பு பழுத்தால் சிவமாயிற்று என்றால் சிவத்தை வேறு என்ன என்று சொல்லலாம்? அருள் என்றும் சொல்லலாம். ஆகவே, அன்பு என்ற ஒன்று எவ்வாறு விரிந்து விரிந்து அருளாகும் என்று ஆராயவேண்டும் என்னில் யாரும் எனக்கு இனியார் இல்லை” என்று பாடுகிறார் நாவுக்கரசர். பார்க்கப்போனால் உலகத்தில் யார்மேல் நமக்கு அதிக அன்பு இருக்கிறது? ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்தால் முடிவு ஏது? நம் பேரில் நமக்கிருக்கிற அன்புதான் உண்மை. ஆனாலும், இதற்கு மேலும் ஏதாவது உண்டா என்று கேட்டால், 'என்னிலும் இனியான் ஒருவன் உளன்' என்னைவிட என்னால் அன்பு செய்யப்படும் பொருள் ஒன்று இருக்கிறது. அது எது?. “என்னுள்ளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு என்னுள்ளே நிற்கும் இன்னம்பர் ஈசனே என்று சொல்லும் பொழுதுதான் இந்த அன்பு விரிந்து அருள் ஆவதற்கு முதற் படியினைக் காண்கிறோம் விவரம் அறியாக் குழந்தையாக இருக்கும்பொழுது காணப்படும் தன்னைத் தவிரப் பிறிதொன்றையும் ஏற்றுக் கொள்ளாத தன்னலம், ஏறத் தாழக் கடைசி வரையிலே வளர்ச்சிபெறாமல் இருந்து விடுபவர்களும் உண்டு. ஆனால், அது விரிந்து புத்த தேவனைப்போல உலகம் முழுவதும் பரிபாலிக்கின்ற சூழ்நிலையிலே அருளாக மாறுகின்றதும் உண்டு. அப்படி அருளாக மாறுகின்ற சூழ்நிலை எல்லோருக் கும் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்குத்தான் கிடைக்கிறது. அப்படி ஒரு சிலருக்குக் கிடைக்கும்பொழுது அது எவ்வாறெல் லாம வேலை செய்கின்றது என்பதை நம்முடைய வள்ளலா