பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 367 சுட்டிப் பார்த்தவுடன் என்ன நடந்தது தெரியுமா? ஒவ்வொரு பொருளாக எண்ணிக்கொண்டே போனேன். முதலாவதாக நான் என்று எண்ணிய பிறகு எதிரே இருந்த பொருளை இரண்டு என்றேன். மூன்றாவதை எண்ணினேன். நான்காவது என்று எண்ணினேன். எண்ணிக்கொண்டே போய்க் கடைசியிலே கோடி கோடியாக விரிந்த அந்த எண்ணிக்கையிலே நானும் அமிழ்ந்து விட்டேன். இருளான பொருளன்றி காணத் தொடங்கிய என்னையும் கண்டிலேன் என்று சொல்லுகின்ற முறையிலே, அந்த அன்புப் பார்வைக்கும் அன்பு இல்லாத பார்வைக்கும் வேறுபாட்டைக் கூறுகிறார். - - அன்புப் பார்வையினாலே பெரியோர்கள் பார்க்கின்றார்கள் உலகத்தை. அப்படிப் பார்த்ததிலே இரண்டு பேர்கள் அந்த அனுபவத்தை வெளியிடுகின்றார்கள். மு. த ல | வ து அனுபவத்தை நமது வள்ளலார் பாடுகின்றார் : கினைந்து கினைந்து உண்ர்ந்து உணர்ந்து கெகிழ்ந்து கெகிழ்ந்து அன்பே கிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணிர் அதனால் உடம்பு கனைக்து கனைந்து அருளமுதே கல்கிதியே ஞான கடத்தரசே என் உரிமை காயகனே என்று வணைந்து வனைந்து ஏத்துதும் காம் வம்மின்உல கியலிர் மரணம் இலாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டிர் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்லுகின்றேன் பொற்சபையில் சிற்சபையில் குக்தருணம் இதுவே,