பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#03 - - - தேசீய இலக்கியம் அன்புடையவர்கள் காணுகின்ற காட்சி இந்தப் பாடலிலே விரிவாகப் பேசப்படுவதைக் காணுகின்றோம். அருளமுதே நன்திேயே' என்று ஆண்டவனைக் காணுகின்ற காட்சி உண்மையான அன்பின் அடிப்படையிலே வாழ்வு தொடங்கப்பட்டால் இறுதியிலே இந்தக் காட்சி கிடைக்கும். அருள் அமுதாக என்றைக்கு ஆண்டவன் காட்சி தருகின் நானோ அன்று அந்த வாழ்கை உண்மையான அன்பின் அடிப்படையிலே தொடங்கப்பட்டது என்பது நன்றாக விளங்கும். ஆண்டவனைப்பற்றி அருளமுதே என்று பாடி பதைக் கேட்கவும் ஒர் ஐயம் எழுகிறது. பல சமயங்களில் நாம் பாடுகின்ற பாட்டின் தொல்லை மிகுதியால் ஆண்டவன் பேரிலேயே ஐயமுதத் தொடங்கி விடுகிறோம். ஆண்டவன் ஒருவன் இருக்கிறானா என்று கேள்வி கேட்கிற ஆனவுடன் அந்த ஐயும் நிற்பதில்லையே! சில சமயங்களிலே நம்மில் சிலர் பிடிமண்ணை அள்ளி அவன் தலையிலே போடலாம் என்று கூடப்போடத் தொடங்கிவிடுகிறோமே உண்மையாக ஆண்டவன் அருள் அமுதாக இருப்பனேயானால், அவன் தமக்கு வகுத்தது அன்பு வழியாக இருக்குமேயானால், இந்த அன்பின் வழியாகத்தான் தன்னை அடையலாம் என்று அவன் வகுத்தது உண்மையானால், ஏன் இப்படிப்பட்ட துன்பங்கள் உலகத்தில் தோன்றுகின்றன என்ற ஐயம் பிறக்கிறது. .سمہ உலகத்திலே ஆண்டவன்தான் எல்லாமே என்று அவனையே சரணம் அடைந்த அன்பர்கள், அன்புவழியிலே அப்படியே மூழ்கிவிட்டவர்கள் இருக்கின்றார்களே, அவர் களுக்குக் கிடைக்கினற பரிசு என்ன தெரியுமா? துன்பத்தின் மேல் துன்பம்; அடி மேல் அடி நினைந்து உருகும் அடியாரை தையவைத்தார்’ என்று திருநாவுக்கரசர் கூறுவார். தொண்டு கிழவராகிய திருநாவுக்கரசருக்குக் கூட அந்தச் சந்தேகம் வந்துவிட்டது. யாருக்கய்யா துன்பம் உலகத்திலே நினைந்து உருகும் அடியார்கட்கு. அன்பு வழிதான் சிவனிடத்திலே கொண்டு சேர்க்கிறது