பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ. ச. ஞானசம்பந்தன்

215

நாட்டுக்காரர்கள் கண்டுபிடித்த பேருண்மை. உள்ளத்திலே அன்பு ஏற்படும்பொழுது உடம்பு வாடுகிறதாம். இதனை மாணிக்கவாசகர் அழகாகப் பாடுகிறார். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி என்று. வாள்துதலே என்ற சொல்லில்ே ஆழ்வார் என்ன பேருண்மையைக் கற்பித்தார்? இந்த உள்ளம் உருகுவதற்கு முன்பிருந்த நிலை வேறு. உள்ளம் உருகிற்று: ஆடினாள்; அகம் கரைந்தாள்: நரசிங்கா என்று சொல்லத் தொடங்கினாள். பிறகு என்ன ஏற்பட்டது? ஒளி ஏற்பட்டது; வட்டமும் ஏற்பட்டது. ஆனால், அந்த வாட்டம் உடம்புக்கு: ஒளி ஏற்பட்டது உள்ளத்திற்கு. ஆகவே மாணிககவாசகர் எந்த் உண்மையை ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி: என்றாரோ, அதனையே இந்தப் பாடலிலும் அழகாகக் காண்கின்றோம். எனவே, இப்பொழுது அந்த அன்பே சிவம் என்ற தலைப்பை மனத்திலே வாங்கிக்கொண்டு பார்ப் போமே யானால், பல. உண்மைகளை நாம் அறியமுடியும். ஆண்டவன் நம்மைப் படைத்தபொழுது நம்மிடத்திலே முதலாக வைத்து வாணிபம் செய்வதற்குத் தரப்பட்ட விதை போன்ற ஒரு பொருள் அன்பு என்பதும், அந்த அன்பை வைத்துக்கொண்டு தன்னல அளவோடு அதனை நிறுத்தி விடாமல், பிறர்நலம் என்ற அளவுக்கு அதனை விருத்தி செய்வோமேயானால், அதுதான் ஆண்டவன் நமக்கு அந்த விதையைக் கொடுத்தற்குரிய பயனை உள்ளவாறு பெறுவ தென்றும், அப்படி உலகத்திலே தோன்றிய வாழ்வை யெல்லாம் எடுத்துப் பார்ப்போமேயானால், ஒரு சிலர் மிகப் பெரிதாக அதனை வளர்த்து, உலகம் முழுவதையும் தழுவிக் கொள்ளுகின்ற நிலைமையிலே அன்பை வளர்த்து அருளாக் கினார்கள் என்றும், அப்படி அருளாக ஆக்கிக் கொள்ளாமல், தங்களுடைய அளவிலேயே சிலர் நின்று விட்டார்கள் என்றும், அன்பை வளர்த்தால் சிவமாக முடியலாம், சிவமாக முடிதல் என்பதே வாழ்க்கையின் பயனைப் பெறுதல் என்றும் கூறலாம்.