பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 - - தேசீய இலக்கியம் சங்க கால மக்கள் வாழ்க்கை முறைக்கும் இடைக்கால (7 - 12 நூற்றாண்டு) மக்கள் வாழ்க்கை முறைக்கும் வேறு பாடு பெரிதும் உண்டு. தமிழ்நாடு, தமிழர் ஆட்சியில் நிலை பெற்றிருந்த அக்காலத்தில், தமிழ் மொழி ஆட்சி செய்த அக்காலத்தில், மக்கள் மனத்தில் நிறைந்திருந்த எக்களிப்பு அவர்கள் கவிதையிலும் இடம்பெற்றது. ஆனால், களப்பிரர், பல்லவர் என்ற வேற்றவர் ஆட்சியில் தமிழ்நாடு வந்தவுடன் இன்பத்தை வெளியே தேட இயலவில்லை. அதனை உள்ளே தேட முயன்றனர் தமிழர். அம் முயற்சியே சமயப் பாடல் களாக முகிழ்க்கலாயின. இவ்வாறு களப்பிரர் வந்து தமிழ் நாடு கொண்டதை மூர்த்தி நாயனார் புராணத்தில் சேக்கிழார், "கானக் கடிசூழ் வடுகக்கரு காடர் காவல் மானப் படைமன் னன்வலிந்து நிலங்கொள் வானாய் யானைக் குதிரைக் கருவிப்படை வீரர் திரண்ட சேனைக் கடலுங் கொடுதென் திசை கோக்கி வந்தான்' (பெ.பு. -மூர்த்தி நாயனார் புராணம், 11.) என அழகாகக் குறிக்கிறார். சங்க கால மக்கள் வாழ்க்கையில், அமைதி ஒரளவு நிலவியது. அக்காலத்து மன்னர்கள் தம்முள் ஓயாது போரிடினும் அவர்கள் பூசல் ஒரு குடும்பத்துள் நடை பெறும் பூசலாகவே இருந்து வந்தது. அப் பூசல்களால் மனத்துன்பம், உடல்துன்பம் நேரிட்டனவே தவிர, மன அமைதிக்கு ஊறுபாடு நேரவில்லை. மேலும், அத்தகைய பூசல்களை வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதியாக அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஏழாம் நூற்றாண் டுக்குப் பிறகு, இற்நிலை மாறியது. சங்க காலத்தில் ஓயாது தமிழ் மன்னருள் போர் நடைபெற்றாலும் வெற்றிகொண்டு ஒரு நாட்டைப் பிடிந்தவனும் தமிழ் மன்னனே ஆவான். தோற்றவனும் தமிழ் மன்னனேயாவான். வென்றவன் பண்பும் சமயமும், பிடிபட்ட நாட்டினரின் சமயம், பண்பு