பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தேசிய இலக்கியம் மல்லல் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்குத் தில்லை வாழ் அக் தணர்தம்மை வேண்ட அவரும் செம்பியர்தம் தொல்லை டுேங் குலமுத லோர்க்(கு) அன்றிச் சூட்டோம் - முடி’ என்று கல்கார் ஆகிச் சேரலன்றன் மலைான டு, அணைய கண்ணுவார். பெ. பு-கூற்றுவ நாயனார், 4 (மவுலி-கிரீடம் செம்பியர்-சோழர்) இவ்வித அரசியல் சூழ்நிலையே மக்கள் மனத்தில் புரட்சிக்குக் காரணமாக அமைந்தது. மக்கள் தம் மனத்தில் அமைதியைத் தேட இலக்கியத்தை நாடினர். அவர்களை ஒன்று சேர்க்கும் கருவியாகச் சமயத் தலைவர்கள் கவிதையை மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நூற்றாண் டின் பின்னர்த் தோன்றிய ஆதிசங் 5ரர் தருக்கத்தை அடிப் படையாகக் கொண்டன்றோ தமது வேதாந்த சமயத்தை நிறுவினார்? சங்கரர் காலத்திற்குள் மக்கள் மனநிலை மாறி விட்டது என்றாலும், ஏழாம் நூற்றாண்டில் சிறந்த கருவியாக அமைந்து விளங்கியது கவிதையே. காரணம் சங்க கால நூல்களுக்குப் பின்னர், பெரு நூல் ஒன்றும் களப்பிரர் ஆட்சியில் தோன்றவில்லை. ஆகவே, பழமையைப் போற்ற விரும்பிய தமிழர் பழமை சிறந்ததற்குக் காரணமான கவிதையை மீண்டும் உயிர்ப்பித்தனர். அந்தக் கவிதையிலும் ஒரு பெரிய மாறுதல் நிகழ்ந்தது இக் காலத்தில்! சங்க காலத்தில் இயல், இசை, நாடகம் என முத்தமிழாகி வளர்ந்த தமிழ்மொழி, களப்பிரர் ஆட்சியில் மங்கிவிட்டது. ஆனால், ஏழாம் நூற்றாண்டில் மறுபடியும் தலையெடுக்கும்பொழுது, தனது மூன்று வடிவத்திற்குப் பதிலாக இயல் வடிவில் மட்டுமே தோன்றியது. இசையும் நாடகமும் பழைய முறையில் மீண்டும் தலை எடுக்கவே இல்லை. சங்க காலத்தில், இம் மூவகைத் தமிழும் நன்கு வளர்ச்சி பெற்று வந்தமையாலேதான் இயற்றமிழ்ப் பாடல் களில் இசைக்குத் தலைமை இடம் தரவில்லை. பல்வகைப் பாடல்கள் தொல்காப்பியனாரால் குறிக்கப்படினும் பத்துப்