பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தேசிய இலக்கியம் தலைவன் பிறப்பு வளர்ப்பில் தொடங்கிப் பாடப் பெற்ற முதல் காப்பியம் கம்பராமாயணமேயாகும். அதனை அடுத்துத் தோன்றிய பெரிய புராணமும் இம்முறையை மேற்கொண்டது. ஆனால், கம்பன் காலத்தில் காப்பிய அமைதி இன்னவாறு இருத்தல் வேண்டும் என்று விரிவாகக் கூறும் இலக்கண நூல் ஒன்றும் இல்லை. இத்தகைய காப்பிய முறை தொல்காப்பிய னாரால் நினைக்கவும் படாதது ஆதலினால், தொல்காப்பியத் திலும் அதன் இலக்கணம், பேசப்பெறவில்லை. எவ்வளவு தான் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய அடிப்படையில் பின்னர்த் தோன்றிய சிந்தாமணியை அமைக்க விரும்பி அதற்கேற்ப உரை வகுத்தாலும், சிந்தாமணி போன்ற ஒரு காப்பியத்தைத் தொல்காப்பியர் கனவிலும் கருதினவரல்லர். எனவே, வடமொழி வழக்குப்பற்றியே நாட்டுப் படலம், நகரப் படலம் முதலியவற்றுடன் தேவர் சிந்தாமணியைப் பாடி இருப்பர் என்று தோன்றுகிறது. என்றாலும் நாட்டுப்படலம், நகரப் படலம் என்பன போன்ற பெயர்களையே இடுவதற்குத் தேவரும் விரும்பாதவராய், நர்மகள் இகம்பகம் என்ற பகுதி யிலேயே இவற்றை அமைத்துப் பாடிவிட்டார். அவருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த சேக்கிழார் ஒருபடி முன் சென்று நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு என்ற தலைப்பு கள் தந்து தேவர் வழியைப் பின்பற்றினார். இது தமிழ் மொழியில் புதுமுறைக் காப்பியம் தோன்றி வளர்ந்த முறையை நன்கு அறிவிக்கின்றது. நாட்டுவளங் கூறும் பகுதி, புலவனுடைய வன்மைக்கு ஏற்றபடி சிறப்பாக அமையும். திருத்தக்கதேவர் தாம் கூறிய క్డౌ பெரிதும் மரபு பற்றிய வளங்களையே கூறிப் பானார். ஆனால், தாம் மேற்கொண்ட சரிதம் அரசனைப் பற்றியது என்பதை மறவாதவராய் இறுதிப் பாடலில், பொருளின் பெருமை கூறி, அது செய்யச் சிறந்தவிடம் எமாங்கத நாடு எனக் கூறினார்.