பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தேசீய இலக்கியும் சங்க கால இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை காணப்பெறுகிறது. சிலப்பதிகாரத்திலும் இறைவன் பெருமை யும் அடியார் பெருமையும் பேசப்படுகின்றன. மணிமேகலை யிலும் புத்ததேவன் பெருமையும் சமய வாழ்க்கையின் இன்றி யமையாமையும் விரிவாகப் பேசப்படுகின்றன. சீவக சிந்தாமணி இன்பத்தை அளவுமீறிக் கூறினாலும் இடை இடையேயும் இறுதியிலும் சமய வாழ்க்கை பற்றிப் பேசியே நூலை முடிகிறது. பெரிய புராணமும், இராமாயணமும், தக்கயாகப் பரணியும் இவைபற்றியே பேசுகின்றன. இவை பல்வேறு சமயங்கள் பற்றிப் பேசுவது உண்மைதான். ஆனாலும், இவற்றிடையே உள்ள பொதுத் தன்மையைக் காணாமல் இருக்க இயலாது. தமிழ் இலக்கிய வரலாற்றைக் கற்பார் இப் பொதுத் தன்மையை அறிவதோடு இரண்டு சிறந்த உண்மைகளையும் அறிதல் வேண்டும் மிகப் பழங் காலந்தொட்டு இலக்கியத்தில் தொடர்ந்து காணப்பெறும் இதனையே தமிழ் இனத்தின் தேசீய மனப்பான்மை’ (National trend) Störg Jagjálópmth. ஒரு நாட்டின் தேசீய இலக்கியம் என்றால் என்ன? கிரேக்கம், ஆங்கிலம், ஃபிரெஞ்சு முதலிய மொழிகளில் தோன்றிய சில இலக்கியங்களை அந்நாட்டின் தேசீய இலக் கியம் என்று கூறினவுடன், அம் மொழி பேசும் தேசத்தில் அம் மொழியில் தோன்றிய இலக்கியங்கள் போலும் என்று பொருள்கொள்வது தவறு. ஒரு தேசத்தின் தேசீய இலக்கியம் என்பது, ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் அத் தேசத்தில் தோன்றிய இலக்கியங்களை மட்டும் குறிப்பதன்று. அத் தேச மக்களின் நாகரிகம், மனநிலை, பண்பாடு இவற்றையும், கால தேச வர்த்தமானங்களில் அவை பெற்ற மாறுதலையும் குறிப்பவையே தேசீய இலக்கியம் எனப்பெறும். இவர்களுள் ஒரு தனிப்பட்ட கலைஞன் முற்றும் புதுவழி வகுத்துக்கொண்டு சென்றிருக்கலாம். தான் ஆக்கும் கலையின் சிறப்பியல்புக்கு ஏற்ப ஒவ்வோர் சமயத்தில், ஒரு தனிப்பட்ட கலைஞன் அதுவரை அவன் நாட்டார் மேற்கொண்ட பழைய வழிகளை விட்டுப் புதுமுறையில் தன் கலையை ஆக்கிச் செல்வதையே