பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தேசீய இலக்கியம் கொடி ஏந்தித் தமிழ்க் கவிதையால் தமிழ்க் கடவுளைப் பாடி, தூங்கும் தமிழினத்னைத் தட்டி எழுப்பின வீரத் தமிழர் ஒருவர் உண்டு என்றால் அவர் ஞானசம்பந்தரல்லாமல் வேறு யார்? வேற்றவர் ஆட்சியால் வெறுமையும் வறுமையும் உற்று அல்லல் உழந்த தமிழரை வீறுகொண்டு எழச் செய்தவர். காழிவேந்தர் என்று தம்மையே கூறும் அவர், ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆட்சி செலுத்தினார். தாமே தமிழைக் காப்பதாகக் கருதிக்கொண்டு கூவும் சிலர், தமிழக வரலாறு கூறும் இவ்வுண்மையை மறைத்த லாகாது. அன்று ஞானசம்பந்தர் இத் தமிழ் இனத்தைக் காப்பாற்றவில்லையானால் இன்று தமிழர் என்று கூறிக் கொள்ள ஓர் இனமே இல்லாமல் பூண்டற்றுப் போயிருக்கும். ஆகவே, அவர் வரலாற்றிலும் கவிதையிலும் மூழ்கி இருந்த சுந்தரமூர்த்திகள். தமிழர் அல்லாத ஏனையவரைத் தம் திருத்தொண்டத் தொகையில் பாடாததில் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா? அத் திருத்தொண்டத் தொகையை அடியொற்றித் தோன்றிய பெரிய புராணம், இக் கருத்தை நன்கு அறிந்து, தமிழனின் தேசீய இலக்கியமாகத் தான் விளங்குதற்குரிய வழிகளை மேற்கொண்டது. இதனை இவ்வளவு தூரம் சேக்கிழார் உணர்ந்திருக்கிறார் என்பதற்குக் கீழ்வரும் பெரிய புராணப் பாடல் சான்றாகும். திருஞானசம்பந்தர் தோன்றி னார் என்று கூறவந்த சேக்கிழாராகிய பழுத்த தமிழர், "வண்தமிழ்செய் தவம்கிரம்ப மாதவத்தோர் செயல்வாய்ப்ப 'திசையனைத்தின் பெருமைளலாங் தென்திசையே வென்றேற மிசையுலகும் புறவுலகும் மேதினியே தனிவெல்ல