பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 43 குறிக்கோளுடன் அதை இயற்றினார் என்று தெரிந்துகொள்ள வேண்டும். பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கம்ப னுடைய இராமாயணமும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரிய புராணமும் தோன்றின. கம்பரும் சேக்கிழாரும் காப்பியங்களையே இயற்றினும் இருவருடைய குறிக்கோள்களும் வேறுபடுவதை ஆழ்ந்து நோக்கினால் காணலாம். இவ்விருவரும் இரண்டு பெரு நூல்களையும் என்ன . காரணங்களால் இயற்றினர் என்பதைத் தெளிவாக அறிய நம்மால் இயலாது. சேக்கிழாருடைய வரலாற்றைக் கூறும் நூல் ஒன்று கிடைக்கிறது அவர் இந்தப் புராணம் பாடுவதற்கு , அந் நூல் கூறும் காரணம் பொருத்தமுடைய தாகத் தெரியவில்லை. சிந்தாமணி என்ற சைன காப்பியத் தின்மேல் சேக்கிழார் கொண்ட வெறுப்பாலே இதனை இயற்றினார் என்று அந்நூல் கூறுகிறது. சைவராகிய சேக்கிழார் சைன சமயத்தினிடம் வெறுப்புக் கொண்டிருந்தார் என்பதை ஒரளவு ஒப்புக்கொள்ளலாம். கவிஞரும் புலவரு மாகிய சேக்கிழார் நல்ல கவிதையாகிய சிந்தாமணியிடம் வெறுப்புக்கொண்டார் என்று கூறுவது அ வ ரு ைட ய புலமைக்கு இழுக்குக் கற்பிப்பதாகும். இந்த உண்மையைச் சேக்கிழார் புராணம் பாடியவர் அறியவில்லை; மேலும், அவர் பாடல்களைப் பார்க்கும்பொழுதே, ஒரு க வி ஞ ண து மன்நிலையை அறியமுடியாதவர் அவர் என்பதை நன்கு அறியலாம். ஆகவே, சைன சமயக் காப்பியமாகிய சிந்தா மணிக்கு எதிராக ஒரு காப்பியம் செய்வதே சேக்கிழாருட்ைய குறிக்கோள் என்று கூறுவது தவறு. கம்பன் என்ன காரணத்தால் இராமாயணத்தை இயற் றினான் என்று அறுதியிட்டுக் கூறத்தக்க சான்று ஒன்றும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம். இவ்விரு பெரும் புலவர் களும் வேறுவேறு குறிக்கோள்களைக் கொண்டே தம் நூல்களை இயற்றினர் என்று கூறலாம். தமிழில் ஒரு சிறந்த காப்பியம் செய்யவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கம்பனுடைய மனத்தில் இருந்திருக்க வேண்டும். அந்த எண்ணம் நல்ல முறையில் நிறைவேறுவதற்குத் தக்கபடி