பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 55 யாது? ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை. இதைவிடக் கூர்மையான கத்தியால் அறுத்துங்கூட மருத்துவரை ஏன் போற்றினோம்? நம்மைக் காக்கவேண்டும் என்ற எண்னத் தால் மருத்துவர் நம் உடம்பை அறுத்தார். நமக்கு அழிவு தேடும் நோக்கத்துடன் மற்றொருவர் பேனாக்கத்தியால் கீறினார். இருவரும் அறுத்தலாகிய ஒரே தொழிலைச் செய்யி னும் எண்ணம் வேறாக இருக்கக் காரணம் யாது? செயல் ஒன்றேயாயினும் செய்வான் மனக்கருத்துக்கு ஏற்பவே பயன் கிட்டுகிறது. நமக்கு நன்மை தேடு கருத்துடன் அறுத்ததால் மருத்துவர் நம் மதிப்பைப் பெறுகிறார் அதே போலச் சிறுத்தொண்டர் பிள்ளையை அரிந்துக் கறி சமைத்ததால் பெருமை அடையவில்லை. பெற்ற பிள்ளையைக் கொல்லும் பெரியோர்கள் இன்றும் உண்டு. ஆனால் சிறுத்தொண்டர் கருத்தில் யாது இடம் பெற்றது? அவர் கொண்ட கொள்கைக் காகவே பெற்ற பிள்ளையை அரிந்தார். அடியார்கள் வாழ்க்கை முழுவதிலும் காணப்படும் பொதுத்தன்மை இது தான். இதனைத்தான் அவர்கள் வாழ்க்கையில் கொண்ட 'குறிக்கோள் அல்லது இலட்சியம் என்று கூறுகிறாம். அடியார்கள் என்பவர்கள் தம் உடல், பொருள், ஆவி அனைத்தும் இறைவனுடைய உடைமை என்று உறுதியாக நம்பி வாழ்பவர்கள். அந்த இறைவனின் அடியார்கள் யாது வேண்டினும், தம் உயிரையே வேண்டினும், மிக மகிழ்ச்சி யுடன் தருதலே தம் கடமை என்று நினைப்பவர்கள். கேட்கப்பட்ட பொருள் எதுவாயினும் சரி, அதனை அகமிக மகிழ்ந்து தருதலே அவர்கள் வாழ்க்கையின் குறிக்கோள். ஒருவரிடம் கேட்கப்பட்ட பொருள் மனைவியாகவும், மற்றொரு வரிடம் பிள்ளையாகவும், மூன்றாமவரிடம் வெறும் சோறாக வும் இருக்கலாம், அதுபற்றிக் கவலை இல்லை. இம்மூன்று பேரும் தாம் தருகின்ற பொருள் எது என்பதைப்பற்றிக் கவலை அடையாமல், தருதல் ஒன்றுதான் அறியவேண்டுவது. தரப்பட்ட பொருள் எவ்வளவு வேறுபட்டாலும் தருபவருடைய குறிக் கோள் மாறுபடுவதில்லையுல்லவா?