பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தேசீய இலக்கியம் தலைகீழாகப் போய்க்கொண்டிருந்த தம் நாட்டு மக்களைக் கைதுக்கி நன்னெறிக்கண் செலுத்துவதே சேக் கிழாரது குறிக்கோள். என்பதும், அதனாலேயே அவர் இவ் வடியார் சரிதங்களைப் பாடினார் என்பதும், தம் கால மக்கள் மனத்தைக் கவரச் சிறந்த கருவியாதலின் காப்பிய உருவத்தை மேற்கொண்டார் என்பதும் நன்கு புலனாகும்.

7. வழியும் பயனும்

திருத்தொண்டர் புராணம் அறுபத்து மூன்று பெரியார் களுடைய வரலாறுகளைச் சுவைபடப் பாடிச் செல்கிறது. இந்த எண்ணிக்கை ஏன்? தமிழ்நாட்டில் இந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள்தாம் வாழ்ந்தார்களா? யாரும் ஆம் என்று கூற முன் வரமாட்டார்கள். பின் ஏன் இந்த எண் னுள்ள அடியார்களைமட்டும் கூறல் வேண்டும்? விடை இரண்டு வகையாக அமையும். முதலாவது: சேக்கிழார் சுந்தரமூர்த்திகள் கூறிய திருத்தொண்டத் தொகையை விரித்துப் பாடுவதை மட்டும் மேற்கொண்டார். அவருடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அதில் இடமே இல்லை. மற்றொரு காரணமும் உண்டு. இந்த வரலாறுகள் அனைத்தும் ஏறத்தாழ வேற்றுமையும் ஒற்றுமையும் கொண் L_5}}6i/ ஒருவருடைய வாழ்க்கைபோல மற்றொருவர் வாழ்க்கை அமையவில்லை என்பதைப் பெரிய புராணத்தை ஒருமுறை படித்தவர்களும் அறிதல் கூடும். ஓர் அடியாரின் பெயரைக் கூறிக் கொண்டு வாழ்ந்தே வீடுபேற்றை அடைந் தவரும் (பெருமிழலைக் குறும்பர்) இதில் உண்டு. தம் பிள்ளையைத் தம் கையாலேயே அரிந்து சமைத்து வீடு பேற்றை அடைந்தவரும் (சிறுத்தொண்டர்) இதில் உண்டு. இவர் பெற்ற வேற்றுக்கும் அவர் அடைந்த பேற்றுக்கும் வுேம்