பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் - 59. றுமை ஒன்றும் இல்லை. ஆனால், வாழ்க்கை முறையில்தான் என்ன வேறுபாடு இத்தகைய வேறுபாடுகள் நிறைந்த பல வரலாறுகளும் இருத்தலினால்தான் சேக்கிழார் இதனைப் பாட எடுத்துக் கொண்டார். இவ்வேற்றுமைகள் ஒரு புறம் இருக்க, ஒற்றுமை என்ன என்பதையும் காணுதல் வேண்டும். இவ்வடியார்கள் அனைவரும் வீடுபேறு என்ற நோக்கம் கொண்டிருந்தார்கள் என்பது ஓர் ஒற்றுமைதான். ஆனால், அந்த ஒற்றுமையை விடச் சிறப்பானது ஒன்று உண்டு. வீடுபேற்றைவிடச் சிறந்த ஒன்றை இவர்கள் அனைவரும் பெற்றிருந்தனர். அதுவே "அவர்களுடைய மன நிலையாகும். இந்த மனநிலைபற்றிச் சிறிது விரிவாக இங்கு ஆராய்வோம். உலகம் தோன்றிய நாள்தொட்டு வழியும் பயனும் (Ends and Means) என்ற இரண்டும் இருந்தே வருகின்றன. மனிதனை உள்ளிட்ட உயிர்கள் அனைத்தும் ஓயாமல் முயல்கின்றன. இந்த முயற்சி உடனே பயன் கிடைக்கக் கூடிய ஒன்றின் பொருட்டாக இருக்கலாம். பயன் பெரிதாக இருக்க இருக்க முயற்சியும் பெரிதாகவும் கடினமாகவும் இருத்தலை அனுபவத்தில் காணலாம். நேரடியாகவும் உடனடியாகவும் பயன் கிடைக்காத சில முயற்சிகளும் உண்டு. இந்த முயற்சியால் அடைய வேண்டிய பயனைப் பற்றி அதிகக் கருத்து வேற்றுமை இல்லை என்று கூறலாம். உலகில் தோன்றிய எல்லாச் சமயங்களும் கொள்கைகளும் இந்தப் பயனைப்பற்றி ஒருமுகமான கருத்தையே தெரிவிக் கின்றன. நிரதிசய இன்பம் என்று சமயவாதி கூறுவதையே கார்ல் மார்க்ஸ் போன்றவர்களும் உரிமை, சமத்துவம், அமைதி, இன்பம் என்று கூறுகிறார்கள். இந்த உலகத்தில் மோகூடி சாம்ராச்சியத்தை நிலைநாட்ட வேண்டும் என்று கூறிய இயேசுவுக்கும், எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே, அல்லாமல் வேறு ஒன்றறியேன்” என்று கூறிய தாயுமானவர்க்கும் பயன் என்பதன் திறத்தில் அதிக வேற்றுமை இல்லை, -